மக்களே...!
எனக்கு தெரியும் எப்படி மேரேஜ் எல்லாம் ...? அப்படின்னு தானே கேட்கறீங்க...சொல்லறேன் சொல்லறேங்க... என் மது என் லைப்புல வந்ததே ஒரு பெரிய மேஜீக்குன்னு சொல்லுவாங்களே அதான் அதான்... அதே தாங்க நடந்துச்சு... எனக்கு தெரியல கஷ்டமா இருந்தாலும் என் பக்கம் இருந்து பார்க்கும் போது மேஜீக் தாங்க அந்த மேஜீக் நடந்தப்ப அதை அனுபவிக்க மட்டும் தான் தோணுச்சு... !
அந்த மேஜீக்க சொல்லறேன்...!
மூன்று வருடங்களுக்கு முன்பு...!
திருமண நிகழ்விற்கு முன் இரவில்..
வீரேந்திரர் கடந்த இரண்டு மாதங்களாக கால்களில் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்.
தன் மகளின் திருமணம் என்பதால் மிகவும் சந்தோஷத்துடன்
வலம் வந்தார்.முதலில் பெண் பார்க்க வந்தவர்கள் பார்த்தவுடன் மதுவதனியை பிடித்து விட்டதால், மாப்பிள்ளைக்கும் பிடித்துப் போக ... ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடந்தேறியது.
மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார்க்கு வருவதும் பெண் வீட்டார்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு விருந்து என ஒரு மாதம் கழிய..
அடுத்த முதல் தேதியில் நிச்சர்யதார்த்தம் பிறகு 30 நாட்களில் திருமணம் என பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது.
வீரேந்திரர் தனது மகளிடம் மாப்பிள்ளையிடம் பேசி பழகு என்று செல்போன் நம்பர் வாங்கி தந்தார்.
ஆனால் மதுவதனியோ எதிலும் ஈடுபடாது பேச வேண்டும் என்பதற்காக பேசினாள்.
ஒவ்வொரு நாளும் முடிவடைய ...
மதுவிற்குள் பயம் கவ்வியது தனது அம்மாவின் புகைப்படத்தை மடியில் எடுத்து வைத்து அழ ஆரம்பித்துவிட்டாள்."அம்மா நீ இருந்திருந்தீங்க நா நான் உங்க மடியிலேயே தவழ்ந்து இருப்பேனா மா...எனக்கு இது செய்யனும் அது செய்யனும்முன்னு பார்த்து பார்த்து சொல்லிக் குடுத்து இருப்பேல மா..." என்று இரவுகள் பல கண்ணீரில் கரைத்தாள்.