நீ பேசதா மெளனங்கள்
அனைத்தையும்
மொழிபெயர்கிறேன்
எந்தன விழி
உந்தன் விழிகளை
காணும் போது...!" நான் ஒரு நடிகன் மட்டும் தாங்க ... கவிஞன் எல்லாம் கிடையாது... ஆனா.. காதல் வந்தாலே... என்னோட டாலுவ நினைச்சாலே...
அப்படியே கவிதையா வருது...! நான் என்னங்க செய்யட்டும்...? "மேரேஜ் ரொம்பவே கஷ்டமான விஷயங்க...எனக்கும் மதுவுக்கும் இடையில புரிதல் இல்லாம பண்ணுனது தப்போன்னு தோணுச்சு... ஆனா புரிதல் இல்லைனாலும் மது மேல எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சுங்க...
அன்று...
"மாமா ... Good Morning" என்று சொல்லிக் கொண்டே வீரேந்திரர் அருகில் அமர்ந்தான் அபினவ்.
ஒரு நிமிஷம்ங்க... நம்ப லைப்ல சில பேர்க்கிட்ட நாம எதிர்பாராம பழகுற சந்தர்ப்பம் அமையும் ஆனா அவங்ககூட பேசின சில நிமிஷங்களேயே நம்ப கூட ஏதோ ரொம்ப வருஷம் டிராவல் பண்ணி பழகுனவங்க மாதிரியே இருப்பாங்க... நான் அப்படி லைப்புல சந்திச்ச நபர்னா என மாமா தான்ங்க... அவ்வளவு அன்பு கல்யாணம் ஆனா அடுத்த நாள் ஏதோ அவங்க வீட்டுல ஒரு ஆளா என்னை பீல் பண்ண வச்சவரு ஸார் சொல்லாதீங்க மாப்பிள்ளை மாமான்னு சொல்லுங்க அப்படின்னு நிமிஷதுக்கு நிமிஷம் மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு அவ்வளவு அன்புங்க... "
நீ ஏன் இப்ப கதைக்கு குறுக்க வரீங்கன்னு கேட்கறீங்களா...?
இல்லைங்க இங்க சொல்லனுமுன்னு தோணுச்சு... ஸாரிங்க வாங்க கதையை கன்டின்யூ பண்ணலாம்.
"என்ன ... மாப்பிள்ளை நைட் நல்ல தூக்கங்களா.. ? " என்று வீரோந்திர்ர் கேட்க...
"ஆமாம் மாமா... ரொம்ப டயர்டா இருந்துச்சு அதான்
மாமா..." என்று அபினவ் கூற"காப்பி குடிச்சுடீங்களா மாப்பிள்ளை... ? என்று அன்போடு கேட்க
"ம்ம்ம் சாப்பிட்டேன் மாமா.."
என்று மதுவை
விட்டுக் கொடுக்காமல் பேசினான் அபினவ்.இதை மதுவும் கேட்க தவறவில்லை.. இவனை நாம் எழுப்பவும் இல்லை காப்பி கொடுக்கவும் இல்லை எப்படி எல்லாம் பொய் சொல்லறான் பாரு பொய்காரன் என மனதிற்குள் மது கருவினாள்.