50 வாழ்வின் மிகப்பெரிய முடிவு

868 51 5
                                    

50 வாழ்வின் மிகப்பெரிய முடிவு

மதுமிதாவின் கையை பிடித்துக் கொண்டு, கோவிலை நோக்கி நடந்தான் ரிஷிவரன். அவனது செயலால் அதிர்ச்சி அடைந்த மதுமிதா, அவன் எந்த அளவிற்கு தீவிரமாய் இருக்கிறான் என்பதையும் உணர்ந்து கொண்டாள். ஆனால் ஏன் அவன் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டும்? எல்லாம் அவர்களுக்கு சாதகமாக தானே நடந்து கொண்டிருக்கிறது? அருணாச்சலம் கூட அவர்களது பாதையை சரி செய்து விட்டு விட்டானே...! அப்படி இருக்கும் பொழுது இவன் அவசரப்படுவதற்கான காரணம் என்ன?

அவன் கையைப் பிடித்து அவனை நிறுத்தினாள் மதுமிதா. அவளை கேள்விக்குறியுடன் பார்த்தான் ரிஷிவரன். 'நீ என்னை நிறுத்துவாய் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை' என்று கூறியது அவனது பார்வை. இப்பொழுதே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவனது முடிவில் அவளுக்கு உடன்பாடு இல்லை என்பது அவனுக்கு ஓரளவு புரிந்தது. ஆனாலும் அவனது முடிவை அவன் கைவிடுவதாக இல்லை... யாருக்காகவும்... மதுமிதாவுக்காகவும் கூட!

"இப்போ கல்யாணம் பண்ணிக்கணும்னு எதுக்காக இவ்வளவு அவசரப்படுற? இவ்வளவு பிரச்சனைக்கு பிறகு, நிச்சயமா எங்க அம்மா அப்பா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சிடுவாங்க. கிரிவரன் அங்கிள் இந்த கல்யாணத்தோட முக்கியத்துவம் என்னன்னு எங்க அப்பாவுக்கு நிச்சயம் புரியவச்சிடுவாரு. அப்படி இருக்கும் போது எதுக்காக இப்படி அவசரப்படுற?"

"அடுத்து என்ன நடக்க போகுது அப்படிங்கறத பத்தி நான் கவலைப்படல. யாரு யாரை சமாதானம் படுத்த போறா... இந்த கல்யாணத்துல யாருக்கு விருப்பம் இருக்கு... இதை பத்தி எல்லாம் நான் யோசிக்கல. ஏன்னா, நான் அருணாச்சலத்தை நம்பல. நமக்கு ஹெல்ப் பண்றதுக்காக தான் அவன் இதெல்லாம் செஞ்சான்னு என்னால நம்ப முடியல. அவன் வேற ஏதோ பெருசா பிளான் பண்றாங்கன்னு எனக்கு தோணுது"

"இல்ல ரிஷி. நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க. பெருசா ஏதாவது செய்ய அவனுக்கு ஏற்கனவே சந்தர்ப்பம் கிடச்சிது. ஆனா அவன் அப்படி செய்யல. கிடைச்ச சந்தர்ப்பத்தை விட்டுட்டு, அவன் ஏன் வேறொரு சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கணும்?"

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Место, где живут истории. Откройте их для себя