51 நான் தான் காரணம்

896 55 5
                                    

51 நான் தான் காரணம்

வியப்போடு மதுமிதாவை பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷிவரன்.

"தைரியமா கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதை நம்ம அப்பா அம்மா கிட்ட இருந்து மறைக்காம, அவங்களுக்கு புரிய வைக்கிறது தான் நம்ம செய்ய வேண்டியது"

"அதை செய்றதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நீ சங்கடப்படுவேன்னு தான் நான் வேண்டாம்னு நினைச்சேன்"

"நான் மிஸஸ் ரிஷிவரன்னு சொல்லிக்க சங்கடப்படல. நம்ம உறவு முறையை மறைக்கவும் விரும்பல"

விருப்பமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டிருந்த போதிலும், தங்கள் உறவு முறைக்கு அவள் கொடுத்த மரியாதை, ரிஷிவரனை நெகிழச் செய்தது. அன்பாய் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்ட அவன்,

"ஐ லவ் யூ சோ மச்" என்றான்.

"ஐ லவ் யூ டூ"

"வா போலாம்"

காரை விட்டு கீழே இறங்கினாள் மதுமிதா. ரிஷிவரன் அவளை பின்தொடர்ந்தான். வீட்டின் நுழைவு வாயிலில் நின்ற மதுமிதா, ரிஷிவரனுடன் ஒன்றாக வீட்டின் உள்ளே நுழைந்தாள்.

அவர்களைப் பார்த்த மதுமிதாவின் பெற்றோரின் முகம் மகிழ்ச்சியில் மிளிர்ந்தது. அவளை நோக்கி ஓடிச் சென்ற தாட்சாயணி, அவளை சந்தோஷத்துடன் தழுவிக்கொண்டார்.

"கடவுள் புண்ணியத்துல நீ நல்லபடியா எங்ககிட்ட வந்து சேர்ந்துட்ட. அருணாச்சலம் அப்பாவுக்கு ஃபோன் பண்ணி, உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னதை கேட்டவுடனே எங்களுக்கு உயிரே போயிடுச்சு" என்றார்.

"உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ரிஷி?" என்றார் சாம்பசிவம்.

"ஒன்னும் பிரச்சனை இல்ல, அங்கிள்... நாங்க வந்து..." என்று அவன் நடந்ததை கூற முயல,

தாட்சாயணியின் அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட மதுமிதா, அவனது உள்ளங்கையை அழுத்தி அவனை தடுத்தாள். அவளை கேள்விக்குறியோடு பார்த்தான் ரிஷிவரன். அப்பொழுது தான் அவளது கழுத்தில் இருந்த திருமாங்கல்யம் தாட்சாயணியின் கண்களில் பட்டது. அவளது நெற்றி வகிட்டில் இருந்த குங்குமத்தை பார்த்த அவர்,

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Donde viven las historias. Descúbrelo ahora