மாப்பிள்ள நான் வேணா சம்மந்திகிட்ட பேசி பாக்குறேன்... என் மகளை கை விட்டுடாதீங்க... உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன்....
என்று ரோஜாவின் அப்பா நீதிமன்றத்தின் வாசலில் நின்று ரோஜாவின் கணவனை கெஞ்சுவதை பார்த்த ரோஜா மௌவணமாக நின்று இருந்தாள்...டேய் இந்த ட்ராமா எல்லாம் பார்த்து மறுபடியும் இந்த குடும்பத்தை கூட்டிட்டு வந்து நடு வீட்டுல நிக்க வச்சிடாத... இன்னைக்கு இவளுக்கும் உனக்கும் விவாவகாரத்து முடிந்ததும்...உன் அக்கா மகளை உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்...
என்று தன் மகனுக்கு உபதேசம் செய்தாள் ரோஜாவின் மாமியார்....என்ன ரோஜா இது.... ஐந்து வருட கல்யாண வாழ்கை... இன்னும் ஐந்தே நிமிஷத்துல முடிவுக்கு வர போகுது.... ஆனா நீ என்ன அமைதியா நிக்குற..
என்று அங்கலாய்த்தான் ரோஜாவின் உயிர் நண்பன்...இனி யாரு பேசியும் ஏதும் ஆக போறது இல்ல.... ஐந்து வருஷம் போகாத கோவில் இல்ல.... ஏறாத ஹாஸ்பிட்டல் இல்ல... இனியும் இவளுக்கு பிள்ளை பிறக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்ல... அதனால வேற எதாவது காரணம் சொல்லி இவளை இன்னைக்கு என் தம்பி வாழ்க்கையில இருந்து அப்புர படுத்த நாங்க முடிவு பண்ணிட்டோம்...
என்று தன் பங்குக்கு வசனத்தை அள்ளி தெளித்தாள் ரோஜாவின் நாத்தனார்...இங்க இவ்வளவு கலவரம் நடக்குது... ஆனா உன் புருஷன் என்ன மனுஷனா....???
நீ பாவம் என்று அவன் அவங்க அம்மாகிட்ட சொன்னா என்ன குறைஞ்சா போயிடுவான்...
என்று ரோஜாவின் தோழி ஒரு பக்கம் சிணுங்கினாள்...இன்னும் சற்று நேரத்தில் ரோஜாவும் அவளின் கணவனும் நீதிபதி முன் ஆஜர் ஆக வேண்டும் என்று ரோஜாவின் வக்கீல் சொன்னதும் ....
நான் உங்ககிட்ட ஒரு ஐந்து நிமிஷம் பேசணும்....
என்று தயங்கியப்படி ரோஜா தன் கணவனிடம் கேட்டாள்.....அவன்கிட்ட இனி பேச உனக்கு என்ன இருக்கு.... அதெல்லாம் நிறையவே பேசியாச்சு.... சும்மா இங்க சீன் எல்லாம் Create பண்ணாம... உனக்கும் இந்த விவாகரத்துல சம்மதம்ன்னு சொல்லு புரியுதா....
என்று மீண்டும் ரோஜாவை மிரட்டினாள் அவளின் மாமியார்...