குறை ஒன்றும் இல்லை...
பகுதி 4
பின் தலையில் அடிபட்டு மயங்கிய ரோஜா கண் விழித்த போது,ஒரு அறையில் அவள் எதிரில் ஒரு ஆண் மகன் நிற்பதை உணர்ந்து .... கொஞ்சம் கொஞ்சமாக தன் பார்வையை கூர்மையாக நோக்கியவள் கண்களுக்கு ...
ஆறடி உயரம்...
கட்டுமஸ்தான தேகம்..
வசீகர முகம்...
வெள்ளை நிறம் என்று இப்படி பட்ட வர்ணனைக்கு எல்லாம் அப்பாற்பட்டவனாக ஒருவன் நின்று இருக்க.... அவனை பார்த்ததும் கட்டிலில் இருந்து பொறுமையாக எழுந்து அமர்ந்த ரோஜா....." துர்கா நீங்களா..!!??" என்று ஆச்சிரியமாக ரோஜா கேட்டதும்....
" ம் ஆமா ரோஸ்... நான் தான்.... பரவாயில்லையே என்னை இன்னுமா மறக்காம இருக்க " என்று அவன் இயல்பாக கேட்டாலும்....
" எப்படி உங்களை மறக்க முடியும்....என் கல்லூரி காலத்தின் கனவு கண்ணன் அல்லவா நீங்கள் " என்று தன் மனதில் எழுந்த பழைய நினைவுகளை சட்டென்று மறைத்து கொண்டவள்.... தன் பின் தலையில் கை வைத்து பார்க்க, வலி இருப்பதை உணர்ந்தாள் ...
" என்ன ரோஸ் வலி ரொம்ப இருக்கா.... டாக்டர் ஊசி போட்டு இருக்காரு.... இன்னும் கொஞ்ச நேரத்துல pain குறைஞ்சிடும் " என்று சொன்னவன், ரோஜாவின் கைப்பையை அவளிடம் கொடுத்தான் ....
" துரு சார்...உங்கள பெரிய ஐயா
கூப்பிடுறாங்க... " என்று ஒருவர் அழைத்ததும்..." நீங்க போங்க.... நான் இதோ வரேன்.... ரோஸ் just 5 mins " என்று சொல்லி வேகமாக அந்த ரூமை விட்டு ஓடியவனின் பெயர் துர்வேஸ்வரன்.....
துர்வா... நம் ரோஜா படித்த கல்லூரியின் சீனியர்....காலேஜ் முதல் நாள் ராகிங் என்ற பெயரில் சீனியர்ஸ் அடிக்கும் கூத்துக்கு தாளம் தட்டாமல் தன்னை அவர்களிடம் இருந்து காப்பாற்றி,ஆறு வருடத்திற்கு முன்பே ரோஜாவின் மனதில் நாயகனாக மாறிய துர்வேஸ்வரனை ரோஜா மட்டும் துர்கா என்று அழைப்பது தான் வழக்கம்.....
துர்வாவும் ரோஜாவும் ஒரே கல்லூரியில் படித்தாலும்,சீனியர் ஜூனியர் என்ற வேற்பாடுகளால் அதிகமாக சந்திப்பாதோ, ஒன்றாக நேரம் செலவிட்டதோ இல்லை...