பகுதி 5

73 8 5
                                    

குறை ஒன்றும் இல்லை..

பகுதி 5

ரோஜா.........துர்வா தனக்காக தந்த புத்தகத்தை மேசை மேல் வைத்தவள்.... கீழே இறங்கி சென்றாள் ......

" வா ரோஜா....நாளைக்கு வாரத்தின் இறுதி நாள்.... அதனால நான் ஒன்பது மணிக்கு தான் படுக்கையில் இருந்து எழுந்துப்பேன்...உனக்கு பசிச்சா பிரிட்ஜ்ல மாவு இருக்கும் நீ தோசை வாத்துக்கோ "
என்று சொல்லிக்கொண்டே டின்னருக்கு மேசை மேல் 3 தட்டை வைத்தாள் கனகா....

" இங்க பக்கத்துல சர்ச் இருக்கா.. "
என்று ரோஜா கேட்டதும்.... கனகாவின் முகம் மாறியது...

" ஏய் நீ என்ன கிறிஸ்டினா " என்று கனகா கேட்கும் கேள்வி ஒன்றும் ரோஜாவிற்கு புதிதல்ல.......

" நான் தமிழ் குடிமகள்....மதத்துக்கு எல்லாம் அப்பாற்ப்பட்டவள்... ஆனா என் உயிர் தோழிக்கு நாளை பிறந்தநாள்... அதான் அவளுக்கு பிடித்த பரம பிதாவை சந்திச்சி அவளுக்கான மனுவை தரலாம்னு கேட்டேன் " என்றாள் ரோஜா....

" ம்... உன் உயிர் தோழி பிறந்தநாளுக்காக சர்ச் போற நீ....... உன் உயிர் நண்பன்.... அதான் என் தம்பி பிறந்தநாளுக்கு எங்க போவ...?? "

" அவன் பிறந்தநாளுக்கு கண்டிப்பா நான் வரதராஜன் பெருமாளை
சந்திப்பேன் "என்று ரோஜா சொன்னதும்.... அவள் தட்டில் சிரித்து கொண்டே கனகா தோசையை வைத்தாள்..

" கை வலி இருந்தா சொல்லு நான் ஊட்டி விடுறேன் " என்று கனகா சொன்னதும்...

" வலி எல்லாம் இல்ல....நீங்க நிம்மதியா சாப்பிடுங்க " என்று ரோஜா சொல்ல.... கனகாவின் கணவன் மோகனின் ஆத்மாவுடன் சேர்ந்து மூவரும் சாப்பிட்டு முடித்தார்கள்....

" சரி ரோஜா... எனக்கு ஆபீஸ் ஒர்க் கொஞ்சம் இருக்கு... அதை முடிச்சிட்டு நான் தூங்கிடுவேன்... நீயும் நேரத்தோடு போய் படுத்துக்கோ.... எதாவதுனா என் ரூம் கதவை தட்டு " என்று சொன்ன கனகா கையில் லேப்டாப் தண்ணீர் பாட்டிலுடன் சேர்த்து போனையும் எடுத்து கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தாள்...

ரோஜா மாடியில் உள்ள தன் ரூமுக்கு வந்தவள்.... கட்டிலில் அமர்ந்து அவள் தந்தையை போன் மூலம் அழைத்தாள்... ரோஜாவின் அழைப்புக்காக காத்து இருந்த அவளின் தந்தை மறுமுனையில்...

ℝ𝕆𝕁𝔸🌹Where stories live. Discover now