அழகிய அசுரா - 1

1.7K 25 2
                                    

அந்த பிரபலமான ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் முன்பு, கண்ணீரை துடைத்தபடி அப்பா உங்களை காப்பாற்ற எனக்கு இருக்குற கடைசி வாய்ப்பு இதுதான். எனக்கும் நம்ம குடும்பத்துக்கும் நீங்க கண்டிப்பா வேணும் பா! உங்களை நாங்க கண்டிப்பா கைவிட மாட்டோம் என்று உள்ளே நுழையப் போனாள் ஆனந்தி.

அங்கிருந்த செக்யூரிட்டி யார் மா நீ?  இதெல்லாம் விஐபிங்க வர்ற இடம், உன்னை மாதிரி ஆளு எல்லாம் உள்ள போக முடியாது என்றார். ஆனந்தி, அண்ணா ப்ளீஸ்‌ணா, எங்க அப்பா ரொம்ப சீரியஸா இருக்காரு. அவருக்கு ஆப்ரேஷன் பண்றதுக்காக ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்.‌ அந்த ஹாஸ்பிட்டல் எம்டி இங்க தான் தங்கி இருக்காரு. அவரைப் பார்த்து முக்கியமான விஷயம் பேசிட்டு போயிடறேண்ணா ப்ளீஸ்! என்று கெஞ்சினாள்.

வாயிலில் இருந்த வாட்ச்மேனுக்கு மனம் இறங்கியது, ஆனால் உள்ளிருக்கும் கார்டுகள் உள்ளே விட மாட்டார்கள் என்று சொல்லியும் கேட்காமல், ஆனந்தி ரொம்ப நன்றி அண்ணா என்று உள்ளே சென்றாள்.

அவர் சொன்னது போலவே, கார்ட்ஸ் பணியிலிருப்பவர்கள் கொஞ்சம் கூட மனமிரங்காமல், அவளை வெளியே போ என்று அதட்டல் தொணியில் திட்டிக் கொண்டிருக்க, ஆனந்தியும் விடுவதாய் இல்லை. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டியா நீ? உனக்கெல்லாம் அவ்வளவு திமிரா என்று அவள் கையை பிடித்து தர தரவென கேட்டிடம் இழுத்துக் கொண்டு வந்தான் ஒருவன்.

அந்நேரம் பார்த்து கருப்பு நிற ஆடி கார் ஒன்று உள்ளே வர, செக்யூரிட்டி அந்த பெண்ணுக்காக பரிந்து பேசவும் முடியாமல், கார் உள்ள செல்வதற்காக கேட்டைத் திறந்தார். அந்தக் கார் உள்ளே வரும் நேரம் சரியாக ஆனந்தியை பிடித்து வந்து கேட்டிற்கு வெளியே தள்ளினான் அந்த கார்ட்.

ஆனந்தி ரோட்டில் விழுந்து தன் கை சிராய்த்துக் கொண்டாலும், அழுது கொண்டே திரும்பி அந்த ஹோட்டலை பார்க்க. அங்க என்ன நடக்குது என்று காரின்‌ வின்டோவை இறக்கிக் கொண்டு, வெளியே பார்த்தான்‌ அந்த ஆடவன். அவன்‌ கார் அருகில் ஒரு பெண் விழுந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்தான்.

அழகிய அசுராNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ