அழகிய அசுரா - 11

26 4 1
                                    

ஆனந்தி ஆதியின் மருத்துவமனையில் தினசரி வேலைக்கு வந்து கொண்டிருக்க, அவள் அம்மா ரேவதி அவளிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். ஆனந்திக்கு வருத்தமாக இருந்தாலும், அவளுக்கு வேறு வழியும் இல்லை என்பதால் அவளும் அப்பாவின் விருப்பத்தை போலவே இந்த கல்யாணத்திற்கு சம்மதித்திருந்தாள்.

ஆனந்தியின் ஒரே வருத்தம், ஒரு வருடத்தில் இந்த திருமண பந்தம் முடிந்து விடும் என்பதை அவரிடம் கூறினால் அவர் என்ன ஆவார் என்பது தான். அதற்குள் எப்படியாவது தன் குடும்ப சூழ்நிலையை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

ஆதி திருமணத்திற்கு சம்மதித்து விட்டதையும், ஆதியின் திருமணம் இன்னும் பத்து நாட்களில் நடக்க வேண்டும் என்ற ஆதியின் விருப்பத்தையும் ஆதியின் தாத்தா, பாட்டிக்கும் குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்துவதற்காக அமுதாவும், சந்துருவும் அவர்களின் பரம்பரை வீட்டிற்கு சென்றிருந்தார்கள்.

சந்துருவின் தம்பி மனோகரன், அப்படியா நம்ம ஆதி கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டானா என்று சந்தோஷப்பட்டார். அவரின் மனைவி வசுந்தராவுக்கோ, இது எப்படி நடந்தது? என்ற கோபம் தலைக்கு எரியது. அவரின் மகன் விக்கிக்கும் அப்படித்தான். ஆதி காதலித்த பெண்ணிடம் இருந்து பிரிந்ததால், அவன் காலத்திற்கும் திருமணம் வேண்டாம் என்று சொல்லி வந்தான். இப்படியே போனால் மொத்த சொத்துக்கும் நான் தான் அதிபதி என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

மேலும் ஆதி, சந்துரு மற்றும் அமுதாவின் ஒரே வாரிசு என்பதால் அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் மொத்த பொறுப்பும் இவனிடமே வந்து விடும் என்று நம்பி இருந்தான். அத்தை மகள் சுவாதியை திருமணம் செய்து கொள்ள அவன் சம்மதித்ததும், அத்தையிடம் இருக்கும் சொத்துக்காகவும், தாத்தா பாட்டியை‌‌ திருப்தி படுத்தி சொத்துக்களை அடையத்தான்.

ஆதியின் தாத்தா, பாட்டிக்கு மகளின் மகள் ஸ்வாதியை ஆதி மணக்க முடியாது என்று கூறியது  வருத்தத்தை ஏற்படுத்திய நேரத்தில், இவன் அவளை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தது அவர்களுக்கு  அவனின் மீது நம்பிக்கையை உண்டாக்கியது. சரியாக காய் நகர்த்தி அவனுடைய திருமணம் இன்னும் இரண்டு மாதங்களில் நடக்கவிருக்கும் வேலையில், ஆதி ஒரு பெண்ணை தேடிப்பிடித்து அதுவும் பத்து நாட்களில் திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்பது அவனுக்கு பேரதிர்ச்சியாக தான் இருந்தது.

அழகிய அசுரா❤️Kde žijí příběhy. Začni objevovat