ஆனந்தி வேறு வழியின்று தன் தலையெழுத்தை தீர்மானிக்கும் அந்த அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தாள் புரிந்தும், புரியாமலும்!
கிருஷ்ணாவுக்குத் தான் அவளைப் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது. என்ன வீட்டு கஷ்டமோ, இந்த மாதிரி இவன்கிட்ட வந்து சிக்கி இருக்கே இந்த பொண்ணு என்று நினைத்து நொந்துக் கொண்டான்.
அவள் கையெழுத்திட்டு முடித்ததும், அவளிடம் இருந்து அந்த டாக்குமெண்ட்டை வாங்கி எல்லா இடங்களிலும் சரியாக போட்டிருக்கிறாளா என்று செக் செய்து கொண்டான் ஆதி. கிருஷ்ணாவும் அந்த டாக்குமெண்டைக் கொடு என்று கேட்க...
ஆதி, வக்கீலா நீ உன் வேலையைப் பார்த்துட்ட. ஆனால், நண்பனா வேறு எதுவும் எனக்கு நல்லது பண்றேன்னு இவளுக்கு சாதகமாக எதாவது வேலையைப் பார்த்து வெச்சிட்டேன்னா அதனால இது பத்திரமா என்கிட்டயே லாக்கர்ல இருக்கட்டும் என்றான்.
கிருஷ்ணாவும் பலே கிரிமினல் டா நீ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான், வெளியில் உன் விருப்பம் என்றுவிட்டான்.
ஆதி, அவளிடம் சாப்பிட்டியா என்று கேட்டான். ஆனந்தி நம்மளையா கேட்கிறார் என்று ஆச்சர்யமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
ஆதி, என்ன பார்க்குற? உன்மேல இருக்க அக்கறைல கேட்டேன்னு தப்பு கணக்கு போட்டுடாத. ஏற்கனவே உங்க அப்பாக்கு உடம்பு சரியில்லை, சாப்பிடாம அங்க ரெஜிஸ்டர் ஆபீஸ்ல வந்து ரெஜிஸ்டரர் முன்னாடி மயங்கி விழுந்துட்டன்னா! நான் என்னமோ உன்னை கடத்திட்டு வந்து இருக்கேன்னு நினைச்சிருவாங்க. நீயும் அதான் சாக்குன்னு எஸ்கேப் ஆகிட்டின்னா!
ஆதி, லுக் எனக்கு ஏற்கனவே நிறைய பிரச்சனை இருக்கு. அதனால புது பிரச்சனைகளை கிரியேட் பண்ணாம இருக்க கத்துக்கோ. கிருஷ்ணா அவளுக்கு என்ன வேணுமோ கேட்டு வாங்கிக் கொடு என்றுவிட்டு ஒரு இம்பார்டன்ட் கால் பேசிட்டு வரேன் என்று எழுந்து சென்று விட்டான்.
ESTÁS LEYENDO
அழகிய அசுரா❤️
Fanficஅழகிய அசுரா என்னும் என் கதை விஜய் காவிரி ஃபேன் ஃபிக்ஷனாக நான் எழுதிய கதை. படித்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள். அதைப் பொறுத்தே அடுத்தடுத்த பாகங்கள் பதிப்பிக்கப்படும். நன்றி❤️