அழகிய அசுரா - 3

35 5 1
                                    

ஆனந்தி, கனவில் அவளை மணக்கோலத்தில் மாமாவிடமிருந்து பிரித்து வந்த அசுரனின் முகம் பார்த்தாள், அது ஆதியே தான். கண்ட கனவின் பலனாக பதறி அடித்து எழுந்து அமர்ந்தாள். இன்று அவன் சொன்னவாறு ரிஜிஸ்டர் ஆபிஸ் செல்லாவிட்டால் அவன் என்ன செய்வான் என்று யூகிக்கக் கூட‌ அவளால் முடியவில்லை.

இதற்கு மேல் எப்படி தூங்க முடியும் என்று எழுந்தவள் ஹாஸ்பிடலில் இருக்கும் பாத்ரூமில் குளித்து, உடையை மாற்றிக் கொண்டாள்.‌  அம்மாவையும் எழுப்பி குளிச்சுட்டு வாங்கம்மா ஹாஸ்பிட்டல் வெளிய இருக்கும் பிள்ளையாரை கும்பிட்டு வருவோம் என்று கூறினாள்.‌

அம்மா சென்றதும், தங்கைகளின் தலையை கோதி விட்டுக் கொண்டிருந்தவள், அம்மா குளித்து வந்ததும் ஹாஸ்பிட்டல் வெளியே இருக்கும் பிள்ளையாரிடம் சென்று வணங்கி வந்தனர்.

ஆதி, அவளின் நடவடிக்கைகளை எல்லாம் கேமரா வழியாக தனது கம்ப்யூட்டரில்‌ பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஆம் என்றும் இல்லாத விதிவிலக்காக இன்று விடியறகாலையே, ஹாஸ்பிடல் வந்து தனது எம்டி அறையில் தங்கி விட்டான்.

ரேவதி ஆனந்தியைப் பார்த்து, ஏன்டி இவ்வளவு சோகமா இருக்க? அப்பாக்கு எல்லாம் சரியாகிடும்னு, நீதானே எங்களுக்கு ஆறுதல் சொன்னே! இப்ப நீயே இப்படி உடைந்து போய் இருந்தா எப்படி மா என்று கேட்டார்.

ஆனந்தி, அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா. நம்ம எல்லாரும் திரும்ப சந்தோஷமா இருக்க தான் போறோம்.  அப்பாவையும், தங்கச்சிகளையும் நல்லபடியா பார்த்துக்கோங்க என்று சொன்னாள்.

ரேவதி, ஏன் டி கிறுக்குத்தனமா பேசுற? அதான் எங்களை பார்த்துக்க நீ எங்கக் கூடவே தான இருக்க, அப்புறம் என்ன?

ஆனந்தி, அதில்லம்மா இனிமேல் கடனைக் கட்ட இரவு பகல் போராடனும்ல அதான் அப்படி சொன்னேன்.‌

ரேவதி, ஆமான்டி எவ்வளவு கடன் வாங்கி இருக்கையில்ல. பரவாயில்லை உங்க அப்பா தேறி வரட்டும். அவரும் ஒரு வேலையைப் பார்த்து கடன் அடைக்க உனக்கு உதவி பண்ணுவாரு என்றார்.

அழகிய அசுரா❤️Where stories live. Discover now