ஆசைக் குதிரை

136 11 2
                                    

அந்தி மாலை,
ஆதவன் அயறும் வேளை,
ஆண்டவன் அருட் சோலை,
நோக்கி நீ நகர்த்திடுவாய் உன் கால்களை.

அஸர் தொழும் நேரம்,
தரை தொடும் உன் சிரம்,
வெற்றியை முத்தமிடும் உன் நெற்றி,
உள்ளம் உயிர் பெறும், ஈமானியத் தீபம் பற்றி.

அழைப்பவன் ஆண்டவன்,
உன்னையும் உலகையும் படைத்தவன்.
நிம்மதி நீ தேடித் தேய்ந்தாய்.
உன் மதி, ஆண்டவன் அழைப்பையும் வேண்டாதவனாய்.

தொடரும் இந்தத் தொடர் கதை:
தீர்த்துக் கிடக்கும் புதிரை,
தீர்க்கத் துடிக்கும் ஆசைக் குதிரை...

சிதறிய முத்துக்கள்Where stories live. Discover now