அதிசயம் கண்டேன்,
ஆச்சர்யம் கொண்டேன்.நடு நிசி நேரம்,
நதிக்கரையோரம்,
நான் நடந்த போது,பகலின் ஒளியில்,
ஓய்வின்றி ஓடிய ஓட்டம்,
இரவின் ஒழிவில்,
ஓர் ஓரமாய் ஓய்வுற்ற தோற்றம்.ஆய்வொன்று செய்தேன்,
அருளொன்று கண்டேன்.மிரளும் இருளுமோர் இறையருள்,
உருளும் உலகில்,
உயிர்கள் உறங்கி மீண்டும் உயிர்த்தெழ.03/10/2014
BINABASA MO ANG
சிதறிய முத்துக்கள்
Spiritualஅவ்வப்போது உள்ளத்தில் உதித்த சில உணர்வுகளை, எழுத்துக்களில் பொதித்த ஓர் கவிதைத் தொகுப்பு. என் இறையுணர்வை, நிறையுணர்வாய் மாற்றும் முயற்சி. கவி வடித்த எனக்கும் அதைப் படித்த உமக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் என்றென்றும் அருள் புரிவானாக.