என்னதான் சுவேதாவுக்கு குமாரின் நட்பு சங்கடத்தை கொடுத்தாலும் அவன் மீது அவளுக்கு பாசமும் இருந்தது.மறுநாள் காலையில் அவன் கன்டிப்பாக வருவான்.வந்தால் எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டே நடந்தாள்.அவன் விடுதி வந்த போது வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.அவன் விடுதியை கடந்து சிறிது தூரம் சென்று திரும்பி பார்த்தாள்.
கண்களை தெருவின் அங்கும் இங்கும் அலைய விட்டாள்.ஆனால் அவன் அங்கே இல்லை.அவன் ஏன் வரவில்லை என்ற குழப்பத்துடன் நடக்க ஆரம்பித்தாள்.
அன்று அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.அவன் ஏன் வரவில்லை.அவனுக்கு என்ன ஆனது.ஒரு வேலை உறங்கி விட்டானா என்று அவள் மனம் அவனை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தது.அவனுக்கு போன் பன்னலாம் என்று நினைத்தாள்.ஆனால் அப்படி செய்தால் அவளுடைய புது நம்பர் அவனுக்கு தெரிந்து விடும் .அது மேலும் அவளுக்கு சங்கடத்தை தந்து விடுமோ என்று பயந்து அந்த யோசனையை கை விட்டாள்.மாலையில் நடந்து அந்த பக்க்ச்ம் வரும் போதும் அவனை தேடினாள் ஆனால் அவன் அங்கே இல்லை.குழப்பத்தோடு வீட்டுக்கு சென்றாள்.
மறுநாள் காலையிலும் அவன் வரவில்லை.அவனுக்கு என்ன ஆனது என்று அவள் மனம் பதை பதைத்தது.
"என்ன டி நேத்துல இருந்து பாக்குறேன உன் முகமே வாடி போய் இருக்கு.சுவேதா எப்பவும் கிண்டலும் கேலியுமா இல்ல இருப்பா",என்றாள் நித்யா.
"ஒன்னும் இல்ல டீ லேசா தலை வலிக்குது",என்றாள்.
"இரண்டு நாளா தலை வலிக்குதா.உண்மைய சொல்லு என்ன விஷயம்",என்றாள் நித்யா.
"குமாரை பற்றி சொன்னால் கண்டிப்பாக நித்யா கோவ படுவாள",என்று நினைத்தாள்.
"திடீர் என்று குமார் கூட பேசுரதை நிறுத்தீட்டேன் .அவன் மறுபடியும் தற்கொலை செய்து கொண்டால் என்ன செய்யுரது.அதை நினைத்து தான் கவலை படுறேன்",என்றாள் சுவேதா.
"தற்கொலை என்ன மொளகா பஜ்ஜியா நினைத்ததும் சாப்பிட.அது ஒரு நொடி முடிவு டி.அதில் இருந்து ஒருதன் மீண்டு வந்துவிட்டால் மறுபடியும் சாக முயற்சி செய்ய மாட்டான்.இப்போ அவன் தேடல் எல்லாம் நீயா தான் இருக்கும்.உன்கூட எப்படியாவது பேசனும்கிர ஆசையில் இருக்குரவன் மறுபடியும் சாக மாட்டான்.ஆனால் நீ இப்போ தான் கவனமா இருக்கனும்.எக்காரணத்தை கொண்டும் மறுபடியும் அவன் கூட பேச ஆரம்பித்துவிடாதே.அவன் ஆபத்தானவன்",என்று எச்சரித்தாள் நித்யா.
சுவேதா புண்ணகைத்தாள்.
"நீ சொல்வது தவறு நித்யா.அவன் ஆபத்தானவன் இல்லை.அன்பானவன்.அரவனைப்புக்காக ஏங்குபவன்.பரிதாபத்துக்கு உரியவன் .அவனை கண்டிப்பாக நான் நல்வழிபடுத்தி ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன்",என்று அவள் மனதில் நினைத்துக் கொண்டாள்.
"என்ன டீ நான் உன்னை எச்சரிக்குறேன் நீ சிரிக்குர",என்றாள் நித்யா.
"ஒன்னும் இல்லை சரி வேலை பார்க்கலாமா",என்று கூறு கண் அடித்தாள்.
நித்யா செல்லமாக அவள் தோளை தட்டி குடுத்து விட்டு அவள் இருக்கைக்கு சென்றாள்.நித்யா தன் இருக்கயில் செல்ல முற்பட்டபோது தனக்கு எதிரில் இருக்கும் செந்திலை கவனித்தாள்.அவன் தன் இருகையில் இருந்து தனது எதிர் புறம் அம்ர்ந்து இருந்த சுவேதாவை பார்த்துக் கொண்டு இருந்தான்.
நித்யா ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டாள்.
"டேய் செந்தில் பாத்து டா.உன் கண்ணு வெளிய வந்தர போகுது",என்றாள்.
அவன் பதறி அடித்துக் கொண்டு திரும்பினான்.அதை பார்த்த நித்யாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.இவர்களை குழப்பமாக பார்த்தாள் சுவேதா.நித்யா வை பார்த்து என்ன என்பதை போல கண் ஜாடை செய்தாள்.நித்யா ஒன்றும் இல்லை சும்மா தான் என்பதை போல ஜாடை செய்தாள்.சுவேதா திரும்பி அவள் வேலையில் மூழ்கினாள்.நித்யா மெதுவாக செந்தில் பக்கத்தில் சென்றாள்.
"ஏன் டா இப்படி இருக்க.இன்னும் எத்தனை நாள் இப்படி பாத்துக்கிட்டே இருப்ப.உன் காதலை எப்போ தைரியமா அவகிட்ட சொல்ல போர",என்றாள்.
"சொல்லனும் நு தான் நினைக்குறேன் ஆனால் அவளை பார்த்தாளே பதட்டம் ஆயிருது",என்றான்.
"சரி நானாவது சொல்லுரேனு கேட்குரேன் அதுவும் வேண்டாம் நு சொல்லுர",என்றாள்.
"இல்லை நித்யா அவகிட்ட நானே தான் சொல்லனும் நு நான் ஆசை படுரேன்.வெறு யார் மூலமாகவோ தெரியபடுத்த எனக்கு இஷ்டம் இல்லை",என்றான்.
"சரி பா நல்லவனே.சீக்கிரம் சொல்லிடு.உனக்கு என்ன உதவி வேனும்னாலும் செய்யுரேன்",என்றாள்.
"ரொம்ப தேங்க்ஸ் நித்யா",என்றான்.அன்று மாலை சுவேதா டிரேய்னைவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.குமாரை பற்றியே அவள் யோசனை இருந்தது.விடுதியை பார்த்துக் கொண்டே கடந்தாள்.அவனுக்கு என்ன ஆனது என்று அவளுக்கு தெரிந்தே ஆக வேண்டும் என்று நினைத்தாள்.விடுதி அருகில் உள்ள ஒரு போன் பூத்தில் இருந்து குமாருக்கு போன் செய்தாள்.
"ஹலோ ",என்றது ஒரு ஆணின் குரல்.
"குமார்",என்றாள்.
"குமார் படுத்துகிட்டு இருக்கான்.நீங்க யாரு",என்றது அந்த குரல்.
"நான் அவன் பிரண்டு .அவனுக்கு என்ன ஆச்சு",என்றாள்.
"அவனுக்கு இரண்டு நாளா காய்ச்சல்.டாக்டர் கிட்ட கூட்டீட்டு போறேன் நு கூப்டா வர மாட்டேங்குறான்",என்றான்.
"நீங்க யாரு",என்றாள்.
"நான் அவன் ரூம் மேட்",என்றான்.
"சரி உங்க ரூம் நம்பர் என்ன",என்றாள்.
"36 ஆமா எதுக்கு கேட்குரீங்க",என்றான்.
"நான் கீழே தான் இருக்கேன்.இப்போவே மேல வறேன்",என்று கூறி போனை வைத்தாள்.
ESTÁS LEYENDO
காதல் கொள்ளமாட்டாயா!
Romanceஇது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட கற்பனை கதை.ஒருவனின் முறட்டு காதல் எப்படிப்பட்ட விபரீதங்களை ஏற்படுத்துகிறது என்பதை காண அவனோடு பயணித்துப் பார்ப்போம்.