நித்யா ஆபீசுக்கு வந்தாள்.செந்தில் வெகு நேரமாக காத்துக் கொண்டு இருந்தான்.இருவரும் சுவேதாவுக்காக காத்துக் கொண்டு இருந்தார்கள்.அப்போது நித்யாவுக்கு ஒரு போன் கால் வந்தது.
நித்யா எடுத்து பேசினாள்.அவள் கண்கள் விரிந்தன.வாய் குழரியது.
"நான்......உடனே வரேன்",என்று கூறினாள்.
"யாரு நித்யா சுவேதாவா",என்றான் செந்தில் ஆர்வமாக.அவன் முகத்தை அவளாள் பார்க்கவே முடியவில்லை .கண்களில் நீர் பெருகியது.
"இல்லை ஒரு முக்கியமான வேலை.வீட்ல இருந்து கால்.நான் உடனே போகனும்",என்று கூறிவிட்டு அவன் முகம் பாராமல் ஓடினாள்.
போகும் வழியில் நித்யா அழுது கொண்டே இருந்தாள்.
"இந்த போன் நம்பர் உள்ள பொன்னு இரயில் நிலையத்தில் இறந்து கிடக்குறாங்க.உடனே வாங்க",என்றது அந்த குரல்.அவளால் இன்னும் அதை நம்ப முடியவில்லை.உடனே அங்கே விரைந்து சென்றாள்.தூரத்தில் கூட்டமாக இருந்தது.அவள் ஓடினாள்.கூட்டத்தை விளக்கிக் கொண்டு சென்று பார்த்தாள.இரத்த வெள்ளத்தில் ஒரு பெண்ணின் உடல் கீழே விழுந்து கிடந்தது.மறுபக்கம் சென்று முகத்தை பார்த்தாள்.சுவேதாவின் முகம் தெரிந்தது.வாய் பகுதி மிக மோசமாக வெட்டப்பட்டு இருந்தது.
"சுவேதா என்ன டி ஆச்சு உனக்கு",என்று கதறி அழுதாள் நித்யா.
ஒரு போலீஸ் காரர் இவள் பக்கத்தில் வந்து நின்றார்.
"இவங்கள உனக்கு தெரியுமா.இவங்க உங்களுக்கு யாரு",என்றார்.
அவள் அழுது கொண்டே கூறினாள்.
"உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா",என்றார்.
"சந்தேகம் எல்லாம் இல்லை சார் கன்ஃபார்ம அவன் தான் அந்த குமார்.அந்த பொறுக்கி தான்",என்று கத்தினாள்.
"யார் அந்த குமார்",என்றார்.
முழு கதையையும் கூறினாள் நித்யா.
"அவன் தங்கி இருக்கும் விடுதிக்கு உடனே போகலாம் வாங்க",என்றார் போலீஸ்காரர்.
அவர்கள் விரைவாக கிளம்பினார்கள்.அவன் விடுதிக்கு விறைந்தார்கள்.அங்கு இருந்த வாட்ச்மேன் அவர்களை வழி மறித்தான்.
"யார் சார் வேணும்",என்றான்.
"குமார் இங்கே தங்கி இருக்கானா",என்றார்.
"இங்கே நிறைய குமார் இருக்காங்க சார்.நீங்க எந்த குமரை கேட்குறீங்க",என்றார் அவர்.
"சுவேதாவை காதலிக்குர குமார்",என்றார் போலீஸ்.
"அந்த குமாரா சார்.மேல தான் இருக்கான்.ஏன் சார் எதும் தப்பு பன்னீட்டானா",என்றார் வாட்ச்மேன்.
"யோவ் கொலை பன்னி இருக்கான் யா.அவன் ரூம் எது நு காட்டு",என்றார்.
வாட்ச்மேன் வாய் அடைத்து போனார்.
மூவரும் மேலே அவன் ரூமுக்கு சென்றனர்.
"இது தான் சார்",என்றான்.
"குமாரு குமாரு கதவை திற பா",என்றான் வாட்ச்மேன.
பதில் எதுவும் வரவில்லை.
"சார் உள்ளே பூட்டி இருக்கு தொறக்க மாட்டேங்குறான்",என்றான்.
"யோவ் கதவை உடை யா",என்றார் போலீஸ்.
இருவரும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
மூவரும் அதிர்ந்து போனார்கள்.அங்கே குமார் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தான்.கையில் ஒரு லெட்டர் இருந்தது.
போலீஸ் அதை அவர் கை படாமல் எடுத்தார.
"சுவேதா நீ இல்லாத உலகத்தில் எனக்கு இருக்க புடிக்கவில்லை ",என்று எழுதி இருந்தான்.போலீஸ் தலையில் அடித்துக் கொண்டார்.நித்யா அதிர்ச்சியில் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.இது தான் உங்க காதலா டா.அவளுக்கு புடிச்சவன் கூட அவளையும் வாழ விடலை.நீயும் அவளோடு சந்தோசமா வாழலை.அவங்க அப்பா அம்மா கிட்ட நான் என்ன டா சொல்லுரது என்று கூறி கதறினாள் நித்யா.(முற்றும்)
ESTÁS LEYENDO
காதல் கொள்ளமாட்டாயா!
Romanceஇது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட கற்பனை கதை.ஒருவனின் முறட்டு காதல் எப்படிப்பட்ட விபரீதங்களை ஏற்படுத்துகிறது என்பதை காண அவனோடு பயணித்துப் பார்ப்போம்.