அன்பெனும் சொல்

336 28 27
                                    

வானத்தை தீண்ட கதிரவன் கதறிய நேரமது காலை பனி மெல்ல படர்ந்த அத்தருணத்தில் ஒரு உரத்த குரல் 'ஜானு' 'ஜானு' என்று. தூங்கி கொண்டிருந்தவளுக்கு உறக்கம் கலையவில்லை இன்னும் உரக்க ஜானு என்றழைக்க மார்கழி குளிர் மெய்ந்த தன்னுடலை அசைத்தாள் ஜானகி கண்ணை திறக்க மனம் மறுக்க உறக்கம் கலைத்தாள்.

"என்னங்க காலங்காத்தாலே உங்களுக்கு என்ன பிரச்சனை" என்று சொல்லி கொண்டே கடிகாரத்தை நோக்கினாள் ஜானகி ஆறு இரண்டை தழுவி கொண்டிருந்தது.

"ஒரு பிரச்சனையுமில்ல இன்னிக்கு எனக்கு ஆடிடிங் சீக்கிரம் ஆபிஸ் போனும் எனக்கு லஞ்சு வேனா ஒகேவா" என்றான் பார்த்திபன்

"இத நேத்தே சொல்லகூடாதா" என்று நொந்து கொண்டாள் ஜானகி.

"சொன்ன மட்டும் என்ன பண்ண போற" என்று முனு முனுத்து கொண்டே கைகடிகாரத்தை மாட்டி கொண்டிருந்தான் பார்த்திபன் "என்ன என்ன சொன்னீங்க" என அதட்டல் தொனியுடன் கேட்டாள் ஜானு

"ஒன்னுமில்ல சொல்ல எங்க நேரமிருந்துச்சு" என்று அவளை சமாளித்தான்.

சமரசமில்லாமல் தனக்குள் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டான் பார்த்திபன்.

சரிடா ! நேரமாச்சு பாய்.... என புலி துரத்திய மானை போல வாசலை நோக்கி ஓடினான் பார்த்திபன்.

இதை விழித்து கொண்டே கவனித்த அவனை கவனிக்க பார்த்திபனுக்கு நேரமில்லை. அது இருந்திருந்தாலும்அவனை கவனிக்க பார்த்திபனுக்கு எண்ணமில்லை. ஆனால் அவன் கவனிக்க வேண்டுமென்றே அவன் விரும்பினான் அது அவன் தவறொன்றும் இல்லை அது காலத்தின் தவறு.

வாசலை அடைந்த பார்த்திபன் அவளை எதிர்பார்த்தது தான், பார்த்திபனை பார்த்த அந்த கணமே 'வணக்கங்கயா' என்றாள் அவள் அதுக்கு மறுமொழி கூற கூட அவனிடம் வார்த்தையில்லை தன் கால் சக்கரத்தை இரு சக்கரத்தில் வைத்து சுழிக்காற்றை போல தெறித்தான்.

இதை அவள் பார்த்து கொண்டே வீட்டுக்குள் நுழைய முற்பட்டாள் அந்நேரம் பேப்பர்காரன் வர அவள் கைநீட்ட பேப்பரை அவள் கைகளில் தர இயலாத அவன் கீழே போட அதை பவ்யமாகவே எடுத்தாள். இதலாம் அவள் பெரிதாக எடுத்து கொள்வதில்லை இதை விட பலவற்றை அவள் ரசித்திருக்கிறாள். பேப்பரையும் கேட்டில் கட்டிய துணிபையிலிருந்து பால் பாக்கெட்டையும் கையில் பற்றி கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள்.

அன்பெனும் சொல்Donde viven las historias. Descúbrelo ahora