"ஹம்சி சென்னைக்கு போனது நான் என் அப்பா கூட இந்த வீட்டிற்கு வந்தேன். இங்க நான் சின்ன வயசுல இருந்த வளர்ந்ததால எனக்கு இங்க இருக்க பயம் இல்ல. வந்த இரண்டு நாள் நானும் அப்பாவு சந்தோசமாக இருந்தோம். இரண்டு நாளுக்கு அப்புறம் கதிர் இந்த வீட்டிற்கு வந்தான். அவன நான் அன்னைக்கு தான் முதல்ல பார்த்தேன். அவன் என் அப்பாவோட (business partner).
அப்பா என்ன கூப்பிட்டாரு. "ஹாசினி இவர் தான் கதிர். உனக்கு இவர கல்யாணம் செய்து வைக்க நான் முடிவு செய்து இருக்கேன் மா." எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
"நீங்க பயப்பட வேண்டாம் யோசிச்சி சொல்லுங்க." என்று கதிர் சொன்னான். யோசிக்காம பிடிச்சி இருக்குனு சொல்லிட்டேன். அது தான் நான் செய்த முதல் தவறு. அவன பத்தி முழுசா தெரிந்துக்கொள்ளாம அவன ஏத்துக்கிட்டேன். அடுத்த நாள் என்ன அவன் கோவிலுக்கு அழைத்து போனான். அப்பா தான் அனுப்பி வைத்தார். அப்போ மனசு விட்டு பேசினோம்.
ஒரு வாரம் இப்படியே போச்சு. அப்போ வீட்டில வேலை செய்ய பல்லவியும், ஒரு ஆலும் வந்தான். அவங்க புதுசு. எனக்கு பழக்கம் இல்ல. அவங்க கிட்ட நெருங்கி பழக எனக்கு விருப்பம் இல்ல. ஆனா பல்லவி கதிர கவனிக்கிறத நான பாத்தேன். அப்போ கதிர்கிட்ட சொன்னேன். அவன் புதுசா கேக்கிற மாதிரி நான் சொலுரத கேட்டான். நானும் அவன நம்பிட்டேன். அன்று இரவு அப்பா அவரச வேலையா ஒரு இடத்திற்கு போக வேண்டியது இருந்தது. போய்ட்டு காலைல வரதா சொல்லிட்டு போனாரு.
அன்று இரவு.
நான் என் ரூம்க்கு தூங்க போய்ட்டேன். திடிரென்று என் தூக்கம் களைந்தது. நான் தண்ணி குடிக்க கீழ இறங்கி வந்தேன். அப்போ பின் புறம் எதோ சத்தம் கேட்டது போல இருந்தது. நான் பின் வாசல் பக்கம் போன. அப்போ பல்லவியும் கதிரும் முத்தம் கொடுக்கிறத பார்த்தேன். நான் உணர்ச்சிவசப்பட்டுடேன்."கதிர்" அவங்க இரண்டு பேரும் அதிர்ந்த போய் என்ன பார்தாங்க. இத ஒடனடியா என் அப்பா கிட்ட செல்ல மேல இருக்க என் ஃபோன்ன எடுக்க ஓடினேன். அவங்க என்ன தொடர்ந்து வந்தாங்க. அப்போ எதிர்க் வந்து வேலைக்காரன் ஒரு கம்பியால என் மண்டைல அடிச்சான். நான் மயங்கி விழுந்தேன். கொஞ்ச நேரத்துல கண் திறந்து பார்த்தா நான் காட்டுக்கு நடுவுல படுத்து இருந்தேன்.
YOU ARE READING
ஹாசினி
Mystery / Thriller5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில்...