{unedited}
Imagine the story. So you will love it😘
Enjoy☺️
*****"ஹாரூஷ் , சிவா...மேலே என்ன செய்கிறீர்கள்??? கீழே இறங்கி வாங்க.....என்று ஹம்சி அவர்களை அழைத்தாள்.
"இதோ வருகிறோம் ஹம்சி" என்று சிவா குரல் கொடுத்தான்.
அவர்கள் கீழே இறங்கி வந்தார்கள்.
"சிவா, ஹாரூஷ் நீங்க டிவி பார்த்துகொண்டிருங்கள். நாங்கள் சமையல் வேலையை கவனிக்கிறோம்"என்று பூஜா கூறினாள்.
"என்ன நீங்க சமைக்க போகிறீர்களா??? என்று ஆச்சரியத்துடனும், பயத்துடனும் சிவா கேட்டான்.
"ஆமாம் இன்று வேலை ஆட்கள் யாரும் இல்லை அதனால் நாங்கள் சமைக்க போகிறோம்" என்று மாலதி கூறினாள்.
"கடையில வாங்கி சாப்பிடலாமே. எந்த பிரச்சனையும் இருக்காது...என்று சிவா பயத்துடன் கூறினான்.
"ஏன் நாங்க சமைத்தாள் நீ சாப்பிட மாட்டியா??? என்று பூஜா கோபமாக கேட்டாள்.
"அப்படி எல்லாம் எதுவும் இல்ல நீ சமைத்தாள் நான் சாப்பிடுவேன்"என்று பதற்றத்துடன் சிவா கூறினான்.
பூஜா புன்னகைத்துவிட்டு சமையல் அறை சென்றாள்.
"எப்படியும் அவர்கள் சமைப்பதை நாம் சாப்பிட்டு தான் ஆக வேண்டும். பின் எதற்கு இந்த விவாதம்???என்று சிவாவை பார்த்து ஹாரூஷ் கேட்டான்.
"எப்படியாவது தடுத்துவிடலாம் என்ற எண்ணம் தான்"...
"இன்று நடக்க போவதை யாராலும் தடுக்க முடியாது வா வந்து என்னுடன் அமர்ந்து டிவி பார்"...என்று ஹாரூஷ் அழைத்தான்.
*****
"சாப்பாடு தயார் ஹாரூஷ் , சிவா வாங்க சாப்பிடலாம்"என்று ஹம்சி அவர்களை அழைத்தாள்."டேய் வாடா போகலாம்" என்று ஹாரூஷ் ,சிவாவை அழைத்தான்.
"ஹாரூஷ் சொந்த செலவுல சூனியம் வச்சிகிறோம் டா" என்று பாவமான முக பாவனையுடன் சிவா கூறினான்.
"உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. பூஜா உன்ன ஏத்துக்கிட்டா. ஆனா நான் இன்னும் ஹம்சி கிட்ட கூட நெருங்கல. இந்த மாதிரி எதாது ஒரு விஷயத்துல அவள சந்தோச படுத்தினாதான் அவ மனசுல என்ன இருக்குனு எனக்கு தெரியும்".
CZYTASZ
ஹாசினி
Tajemnica / Thriller5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில்...