"Unedited "
"ஹம்சி அந்த மோதிரத்தை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
"என்னாச்சு ஹம்சி ???" என பூஜா கேட்டாள்.
"வேர்த்து விருவிருத்து ஒரு பதற்றத்துடன் அந்த மோதிரத்தை அவள் உள்ளங்கையில் வைத்து மடித்து மெல்லிய குரலில் "என் என் என் அம்மாவின் மோதிரம்" என்றாள்.
"சரி அதுக்காக ஏன் இவ்வளவு பதற்றமாகுற???
"இந்த மோதிரம் இங்க எப்படி வந்தது என்று எண்ணிதான் அதிர்ச்சி அடைந்தேன்...என்று ஹம்சி கூறினால்.
"எப்பவாது உங்க அம்மா இங்க வரும்போது விட்டுட்டு போய் இருப்பாங்க"
"பூஜா.....சில வினாடி மௌனத்திற்க்கு பின்...என் அம்மா இந்த வீட்டிற்க்கு வந்து 15 வருடம் ஆகிறது.
"இந்த மோதிரம் 15 வருடத்திற்கு முன் வாங்கியதா??? என பூஜா கேட்டாள்.
"இல்ல பூஜா இந்த மோதிரம் 3 வருடத்திற்கு முன் வாங்கியது. வாங்கிய அடுத்த வருடம் இது துலைந்துவிட்டது. அது இங்கு எவ்வாறு வந்தது என்று எண்ணிதான் நான் அதிர்ச்சி அடைந்தேன்.
"ஹம்சி உன் அப்பா இங்க வருவாரா???
"வருவாரு பூஜா...
"அப்போ அப்பா தவறாக கொண்டு வந்து இங்கு வைத்து இருக்கலாம்...
"இருக்கலாம் பூஜா...அந்த வார்த்தையை கேட்டதும் ஹம்சி நிம்மதி அடைந்தாள்.
"ஹம்சி இந்த வீட்ல ஏதோ இருக்கு...என்று பூஜா அவள் பக்கம் அமர்ந்து பயத்துடன் கூறினால்.
"பூஜா நீ சொல்லுவது நான் நம்பாம இல்ல ஆனா. அத பற்றி இப்போ பேச வேண்டாம். அது மட்டும் இல்ல நீ இது சிவா, மாலதிகிட்ட சொல்லிடாத.
"சரி ஹம்சி...
"சரி வா பூஜா நம்ம சாப்பிட போகலாம்...
"நீங்க எங்கும் போக வேண்டாம்...என்று ஹரூஷ் அறையின் உள் நடந்துக்கொண்டே கூறினான். அவன் பின்னால் மாலதி, சிவா இருவரும் சாப்பிட தேவையான பொருள்களை எடுத்து வந்து அறையின் நடுவில் வைத்தனர்.
ESTÁS LEYENDO
ஹாசினி
Misterio / Suspenso5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில்...