18.

839 66 8
                                    

ப்ராவதன் தன்னை தானே கண்ணாடியில் பார்த்துக் கொண்டு அழுதான்.பழைய ப்ராவதனாக அவன் இல்லை.பாதி மனிதனாகவும்,பாதி மரமாகவும் இருந்தான்.ஆம்,உண்மையான மரம் தான்.கைகளில்,கால்களில்,முகத்தில் என எல்லா உறுப்புகளிலும்,மரப்பட்டைகள் போன்றவை வளர்ந்திருந்தன .
(இது உண்மையாகவே ஒரு நோய்.உலகில்,தற்போதைய நிலையில் நான்கு பேர் இந்த நோயினால் அவதிபட்டு கொண்டிருக்கிறார்கள்.இதற்கான தீர்வு இன்றளவும் கண்டுபிடிக்காமல் தான் உள்ளது.tree man disease என்று browse செய்து பாருங்கள் )
ராஜாவின் குரல் கேட்டு பலர் அறைக்கு வந்தனர்.ப்ராவதன் கூச்சத்தால் கூனி குறுகினான்.எவர்கள் முன்னிலையில்,கம்பீரமாய்,தன் வசிய தோற்றத்தோடு,நடந்தானோ,அவர்கள் முன்னிலையில்,இப்பொழுது,ஓடி ஒழிய வேண்டும் போல் இருந்தது.அறைக்குள் வந்த அனைவரும்,ப்ராவதனைப் பார்த்து மிரண்டனர்.அதோடு நிற்காமல்,அவனைக் கண்டு பயந்து,ஒதுங்கி நின்றனர்.அரசவை வைதியரை விரைவாக வருமாறு  அழைத்தனர்.அவரும் வந்து ப்ராவதனைப் பார்த்து விட்டு தன் வாழ்நாளில் இப்படி ஒரு,விசித்திரமான நோயை கண்டதில்லை என்று கை விரித்துவிட்டார்.அந்த இடமே ஸ்த்தம்பித்து போய் இருந்தது.அப்பொழுது,
அமைச்சர்களுள் ஒருவர்,
"இப்படி செய்வதறியாது நிற்பதில் பயனில்லை.ப்ராவதனால் முடியாத காரியத்தை பரதனை வைத்து முடிப்போம் ..அரசரே ,உங்கள் நாட்டம் எதுவோ ?"மயக்கத்திலிருந்து அப்பொழுது தான் எழுந்த ராஜா,"ம்ம்ம் "என்று தலையசைத்தார்,ஜீவனில்லாமல்.அனைவரும்,ப்ராவதனை அறையில் தனியே விட்டுவிட்டு பரதனை முடிசூட சென்றனர்.வாழ்வில் முதன்முறையாக,தான் மற்றவர்களால் மறக்கப்பட்டது,வலுவாக அழுத்தியது அவன் வலுவிலந்த இருதயத்தில்.காதம்பரியை நினைத்தும் நெஞ்சம் கவலை கொண்டது.அவள் என்ன நினைத்திருப்பாளோ? என்று அகம் அவளை சுற்றியே அலைந்தது.அழுது அழுது கண்கள் வரண்டன.

6 மணி நேரம் கழித்து.....

அவன் அறை கதவை தட்டும் சத்தம் கேட்டது.அருகே சென்றான்.பணிபெண் ஒருத்தி வந்து,உணவை ஒரு கவளத்தில் தந்து விட்டு சென்றாள்.தன்னிடம் இரண்டு முறை காதல் கடிதம் தந்த இவளா இப்படி,தீண்டக்கூடாதவர்களை கவணிப்பது போல் கவணித்து விட்டு செல்கிறாள் என்ற ஆச்சிரியம்,அவன் அவலை நிலையைக் குத்தி காண்பித்தது.உணவை தொடவேயில்லை.படுத்தே கிடந்தான்,கண்ணீரோடு.
15 நிமிடங்கள் கழித்து......
கதவு தட்டும் சத்தம்...
திறந்தால்....
பரதன்........
"ப்ராவதா !!!!! கவலை படாதே.நான் இப்பொழுது இந்நாட்டின் அரசன்.என் செல்வாக்கை பயன்படுத்தி கண்டிப்பாக ,வெளிநாட்டிலிருந்து வைத்தியர்களை வரவைத்து உன்னை குணப்படுத்துவேன்.அது வரை நீ இங்கேயே எனக்கு கீழ் இருக்கலாம்." 'கீழ் 'என்பதை அழுத்தமாக சொன்னான்.சிறிது தூரம் நடந்துவிட்டு,மறுபடி ப்ராவதனை நோக்கி,"நீ ஒரு நிமிடம் என் உடலில்,நானாக இருந்து பார்க்க வேண்டும்,அப்பொழுது தான்,என் மகிழ்ச்சியின் ஆழம் உனக்கு புரியும்.இன்று நான் எப்படி உணர்கின்றேன் தெரியுமா? "கைகளை வானை நோக்கி உயர்த்திய படி,"உலகை வென்றவன் போல் உணர்கிறேன்,ப்ராவதா! !!!!! ஆனந்தம் !ஆனந்தம்! மனமுழுக்க ஆனந்தம் ! உன்னை வென்றது,எவ்வளவு போதையாக உள்ளது தெரியுமா ?கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் "ப்ராவதன் நிமிர்ந்து பரதனின் கண்களைப் பார்த்தான்."ஐய்யோ ப்ராவதா,உனக்கு இந்த நோயை கொடுத்ததற்காக இல்லை. "வில்லதனமாய் சிரித்துக் கொண்டே "ஆயிரம் தான் இருந்தாலும் நீ என் பெரியப்பா வின் ஒரே மகனல்லவா ?எனக்கு அரசன் பதவி கொடுத்ததற்காக தான்,கடவுளுக்கு கடமை பட்டுள்ளேன் ."
சிறிது நேரம் ப்ராவதன் கண்கலங்குவதை பார்த்து விட்டு,"ப்ராவதா !!!உன்னை பார்க்க ஒரு உள்ளம் வந்துள்ளது.பெயர் ஏதோ கதம்பமோ,காடா......"முடிப்பதற்குள்,"காதம்பரியா ?"என்று கத்தினான் ப்ராவதன்.  மெலிதாய் புன்னகைத்து கொண்டே "அந்த பரி தான் "
"பரதா,அவளை நான் பார்க்க வேண்டும்.எனது காயங்களுக்கு இப்பொழுது இருக்கும் ஒரே மருந்து அவள் தான்.அவளை அனுப்பு "காதம்பரி....!அந்த பெயர்,சொர்க்கமாய் தெரிந்தது.ஒரு நிமிடத்தில்,அவனது உடைந்த பாகங்கள் எல்லாம் ஒட்டிக் கொண்டாற் போல் ஒரு உணர்வு."ஆகட்டும்"  என்று பின்னே சென்றான் பரதன்.பின்னிருந்து காதம்பரி வந்தாள்,"ப்ராவதா !"என்று கதறினாள்."கந்தா காதம்பரி....கந்தா.....உன் கந்தாவை பார் "
"ப்ராவதா,உன்னை நான் கண்டிப்பா குணப்படுத்திருவேன்.கவலை படாதே "
"உன்னை பாத்த வினாடியில இருந்து என் மனம் கவலை படுறது நிறுத்திருச்சு காதம்பரி.வா.....இங்கிருந்து போயிரலாம்.யாரும் வேணாம்.எதுவும் வேணாம்.நான் நீ மட்டும் வாழலாம்."
கண்ணீரை துடைத்து கொண்டு பேச ஆரம்பித்தாள் காதம்பரி,"நான் நீ மட்டும் வாழ்ந்து.நான் என்னத்த காண போறேன் ?"
"காதம்பரி !!!!!!"நடுக்கத்துடன்.
"இங்க பாரு கந்தா,நீ இளவரசன் னு தெரிஞ்ச பிறகு தான் உன்னை காதலிக்கவே ஆரம்பிச்சேன்...சேசே..இல்ல ..காதலிக்குற மாதிரி நடிக்க ஆரம்பிச்சேன்.ஆடம்பரமா அரசியா வாழுற சந்தர்ப்பம் வந்தா,கழுதையை காதலிக்க கூட யாரும் தயங்க மாட்டாங்க.நான் மட்டும் என்ன விதி விலக்கா.இப்ப நீ ராஜா இல்ல னு ஆகிபோச்சு.எதுக்கு தேவையில்லாம வேஷம் போட்டுகிட்டு......கலைச்சுட்டேன்.இதான் நான்.போயிட்டு வரேன் "என்று திரும்பினாள்.அவள் தோள் மீது கை போட்டு கொண்டு,பரதன் நடந்தான்.அந்த வினாடியில் தேகம்,சாவிற்காக ஏங்கியது.வாழ்வில் எல்லோருக்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்,சில கொடுமைகளைப் பார்பதை விட சாவதே மேல் என்கிற எண்ணம்.ப்ராவதனுக்கு அப்பொழுது அந்த எண்ணம் தான் வேரூண்டியது மனதில்.
அந்த 7 நாட்கள்,இப்படி வாழ்க்கையை புரட்டி போடும் என்று கனவில் கூட ப்ராவதன் நினைத்ததுயில்லை.வாழ்க்கையே தலைகீழாய் மாறியது.தன்னை போற்றிப் பாராட்டிய மக்கள்,இப்பொழுது அருவருப்பாய் அவனைப் பார்க்கின்றனர்.பதவி,காதல்.பாசம் எல்லாம் ஒரு நொடியில் காணாமல் போனது.வாழ்வின் மீது பற்றிழந்தான்.

3 நாட்கள் கழித்து .
பணிபெண் பதற்றத்துடன் பரதனை நோக்கி வந்தாள்,
"அரசரே,தங்கள் சகோதரர்,ப்ராவதன் அறையில் இல்லை.காணாமல் போய்விட்டார்.அறை கதவு திறந்து இருக்கின்றது "
அவன் காதம்பரியைப் பார்த்து சிரித்தபடி "அவன் இருந்தால் என்ன போனால் நமக்கு என்ன?"பணிப்பெண்ணை நோக்கி "அப்படியே விட்டுவிடு.யாரிடமும் இச்செய்தியை சொல்ல வேண்டாம்"

Take a moment to vote and comment .

மரணமா ? மர்மமா ?Where stories live. Discover now