💕18💕

2K 134 149
                                    

"ஆமாம் கமலா... எனக்கும் அதே தான் தோன்றியது, இப்படிப்பட்ட பெற்றவர்களுக்கு பிள்ளையாக பிறப்பதற்கு கருவிலேயே கலைந்து விடலாம் பிறந்து அனுபவிக்கும் வலிகளாவது மிச்சமாகும். ஆனால்... எப்படி தன்னுயிரில் உதித்த உயிர் என்று ஒரு நேரம் இல்லையென்றாலும் இன்னொரு நேரம் மனதிலே துளி பாசம் கூடவா தோன்றாது? ச்சே..." என புலம்பினான் சித்தார்த்.

"ம்... சரி விடு முடிந்து போனதையே கிளறிக் கொண்டிருந்தால் மனதில் ஏற்படும் ரணம் தான் மிச்சம். ஏதோ இந்த அளவுக்கு அவள் வாழும் நிராதரவ வாழ்வு உன் கண்ணில்பட்டு உன்னிடம் வந்து சேர்ந்தாளே அதுவரை எனக்கு சந்தோசம். இனி அவளை உன்னால் மட்டும் தான் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ள முடியும். அவள் மனதில் பழைய எண்ணங்கள் எதுவும் தோன்றாமல் நீ தான் கவனித்துக் கொள்ள வேண்டும். அதாவது அவளிடம் எந்த பரிதாபமோ, பச்சாதாபமோ நீ காட்ட கூடாது. எல்லா கணவன் மனைவி போல் இயல்பாக வேலை வாங்கு, சண்டை போடு, ஒன்லி கொஞ்சிக் கொண்டு மட்டும் இருக்காதே!" என்றாள் கமலா.

"ஏய் இரு இரு... நீ அவள் நல்லதற்கு சொல்கிறாயா அல்லது பொறாமையில் சொல்கிறாயா?" என்றான் சந்தேகமாக.

"ஹிஹி... கண்டுப்பிடித்து விட்டாயா?"

"அடிங்க..." என்றவன் கையை ஓங்க, "சரி சரி போதும், எனக்கு ஷிப்டுக்கு நேரமாகிறது நான் கிளம்புகிறேன். இன்னும் த்ரீ டூ ஃபோர் அவர்ஸ்ல அவளுக்கு அரிசி கஞ்சி கொடுத்து மாத்திரையையும் கரெக்டாக கொடுத்து விடு, பை!" என்றவள் ஓடி விட்டாள்.

அவளைக் கண்டு சிரித்தபடி உள்ளே சென்றுப் பார்த்தான். சிந்துவும், தருணும் நன்றாக உறங்கி கொண்டிருந்தனர்.

'சரி... தருண் எழுவதற்குள் சமையல் வேலையை முடிப்போம்!' என கிச்சனுள் புகுந்துக் கொண்டான்.

சிந்துவின் உடல்நிலை இரண்டு நாட்களில் குணமாகி விட, முழுவதுமாக தேறிவிட்ட அவள் தருணுக்கு போட்டியாக சித்துவிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டு சுற்ற ஆரம்பித்தாள்.

நானொரு சிந்து...Where stories live. Discover now