நெற்றியை சுருக்கியபடி யோசனையில் இருந்த தருணிடம், "என்னடா கண்ணு அம்மா சொல்கிறது புரிகிறதா? நாம் இப்படி இருக்கிறோமே என்று மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே, நீ வளர்ந்த சூழ்நிலை அப்படி. இப்பொழுது கூட உன்னை யாரும் ஒரு குறைச் சொல்வதில்லையே, தருண் போல ஒரு பிள்ளை கிடைக்க நீங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எவ்வளவு பொறுப்பாக இருக்கிறான். இந்தச் சின்ன வயதில் எங்கு சென்றாலும் தன் தம்பியிடம் எந்த சண்டையும் போடாமல் பொறுமையாகவும் கவனமாகவும் அவனை பார்த்துக் கொள்கிறான். அதனால் கருணும் அவனிடம் எவ்வளவு பாசமாக இருக்கிறான்... ஆனால் எங்கள் வீட்டில் வந்துப் பாருங்கள் எப்பொழுது பார் ஒரே குழாயடி சண்டை தான். இரண்டும் வீட்டில் இருந்தால் ஒரே ரணகளம் தான் என் பிபி லெவலை கொஞ்சமும் குறைய விடாமல் அதிகமாகவே வைத்திருப்பார்கள் என்று தங்கள் பிள்ளைகளை பற்றி என்னிடம் புலம்பி தள்ளுவார்கள். அப்பாவுக்கும் இதை கேட்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் எல்லாம் எங்கள் தருண் குட்டியினால் தான் என்று பெருமையாக சொல்வார்!" என சிந்து சிரிக்கவும், தருண் முகத்திலும் மெல்லிய புன்னகை அரும்பியது.
"சரி வா அவன் என்ன செய்கிறான் என்று பார்த்து இழுத்து வருவோம். ஹோம் ஒர்க் செய்ய நேரமாகி விட்டதே என வருகிறானா பார், சேட்டைக்கு மட்டும் குறைவில்லை!" என்று அவன் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள்.
"இல்லைம்மா இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கிறது. நான் வருவதற்குள் உன் படிப்பை முடித்து விடுண்ணா அப்புறம் எனக்கு சொல்லி தர வேண்டும் என்று விட்டு தான் விளையாடப் போயிருக்கிறான், வந்து விடுவான்!" என தன் தம்பியை விட்டுக் கொடுக்காமல் பேசியபடி நடந்தான் தருண்.
"நீ அவனுக்கு இப்படி சப்போர்ட் பண்ணுவதால் தான் எந்தக் குறும்பு செய்தாலும் அவன் தைரியமாய் உன் பின்னே ஒளிந்துக் கொள்கிறான்!" என்று சீண்டினாள் அவள்.
"குறும்பு தானேம்மா அடாவடி இல்லையே, ஐயோ... அன்று மட்டும் நீங்கள் அந்த எதிர்வீட்டு பிரணவை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் நம் கருண் எவ்வளவு குட்பாய் என்று!" என்றவன் நகைக்க, தன் தோளுக்கிணையாக வளர்ந்துக் கொண்டிருந்தவனின் தோளில் கைப்போட்டு நகைத்தபடி உடன் சென்றாள் சிந்துஜா.
YOU ARE READING
நானொரு சிந்து...
General Fictionபுத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பெற்ற தாய், தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டு வாழ்வில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து தனிமையில் போராடும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வை நம் நாயகன் எவ்வாறு வசந்தமாக்குகிறான் என்பதை காண்போ...