சிறு கதை

232 37 44
                                    

திருமால்பூர் வரை செல்லும் அடுத்த மின் தொடர் வண்டி இன்னும் சிறிது நேரத்தில் 2வது பிளாட்பாரத்தை வந்தடையும் என்று ஒலிப்பெருக்கியில் ஒலிக்க, வேலை முடிந்து வீடு செல்ல சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் காத்திருந்த சுந்தர் ரயிலில் ஏற ஆயத்தமானான்.

இருக்கையில் அமர்ந்த விஜய் யோசனையில் ஆழ்ந்தான். மனைவிக்கு கடந்த இருமாதமாக மஞ்சள் காமலை தாக்கியிருந்ததால் எழுந்து நடக்க கூட முடியாத நிலை.

நம்ம நிலைமையைப்பற்றி கூறி பக்கத்து வீட்டு மாலதியிடம் அதைப்பற்றி கேட்கலாமா அவள் ஒப்புக்கொள்வாளா. சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள், ஏற்கனவே சென்ற வருடம் விபத்தில் கணவனை இழந்து ஒன்றரை வருட கைக்குழந்தையுடன் இருக்கும் மாலதியைப்பற்றி ஏற்கனவே அவன் பக்கத்து வீட்டு வினோத், அவள் அதற்கு சம்மதிப்பாள் என்று அவனிடம் கூறியிருந்தான்.

அதனால் தான் முடிவோடு அவளிடம் இன்று எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என தீர்மாணித்திருந்தான். நாம் செய்யப்போகும் இந்த காரியம் நம் மனைவிக்கு தெரிந்தால் அவள் என்ன நினைப்பாள், ஏதேனும் பெரிய பிரச்சனை ஆகி விடுமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில் வண்டி கிண்டி ரயில் நிலையத்தை அடைந்தது.

அவன் எதிர்பாராத விதமாக அவன் பக்கத்துவீட்டில் இருக்கும் மாலதி அதே ட்ரைனில் ஏறி அவன் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவளைப்பார்த்ததும் ஒரு நிமிடம் ஆடிப்போனான்.

வண்டி நகர ஆரம்பித்தது.
பாக்கெட்டை தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தவாரே ட்ரைனில் அவள் எதிரில் அமர்ந்திருந்த மாலதியை பார்த்தான். பாக்கெட்டில் 2000 இருந்தது.

மாலதி அவன் பார்ப்பதை பார்த்து மெலிதாக சிரித்து வைத்தாள்.

ட்ரைன் கிரோம்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்த போது இருவரும் இறங்கினர். மார்க்கெட் பின்னிருந்த சந்தில் நடந்த போது அவன் கேட்டே விட்டான். மாலதியும் புண்ணகையுடன் சம்மதித்து விட்டாள். அவளை வீட்டிற்குள் அழைத்து செல்ல தீர்மானித்து...

வீட்டிற்குள் சென்று தன் மனைவி உறங்குகிறாளா என்று உறுதிப்படுத்திக்கொண்டு அவள் அறைக்கதவை தாழிட்டு விட்டு மாலதியை வீட்டிற்குள் அழைத்து வந்தான்.

மாலதி இந்தாம்மா இதில் 2000 பணம் இருக்கிறது. செலவுக்கு வச்சிக்கோ என்றவாறு அவள் கையில் திணிக்க முற்பட்டவனை முறைத்துப்பார்த்து விட்டு,..

"அண்ணா என் மருமகனுக்கு தாய்ப்பால் கொடுக்க எதுக்கு அண்ணா பணம்."

இந்த பணத்தை அண்ணிக்கு மெடிசின் வாங்க வச்சிக்கோங்க. 2 மாசமா குழந்தைக்கு புட்டி பாலா கொடுத்து உடம்பை கெடுத்து வச்சிருக்கீங்க என்று கடிந்து கொண்டவாறு திரும்பி உட்கார்ந்து குழந்தையை தூக்கி மடியில் கிடத்தி மாராப்பை குழந்தை தலையில் மூடியவாறு பால் கொடுக்கலானாள்.

குழந்தையின் பசியாறி உறங்கியது.

குழந்தை எப்போது அழுதாலும் தூக்கிட்டு வாங்கண்ணா என்றவாறு சிரித்துக்கொண்டே சென்றாள்.

Kamu telah mencapai bab terakhir yang dipublikasikan.

⏰ Terakhir diperbarui: Jul 23, 2017 ⏰

Tambahkan cerita ini ke Perpustakaan untuk mendapatkan notifikasi saat ada bab baru!

பசிTempat cerita menjadi hidup. Temukan sekarang