காதல் அப்படினு சொன்னதும் என்ன நினைவுகள் உங்கள் மனதிற்கு வரும்.
எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது முதல் காதல்.ஒன்னுமே தெரியாதா வயதில் பள்ளிகூடத்துல சைட் அடிச்ச டீச்சர் முதல் கொண்டு ஞாபகம் வரும்.
கதாநாயகனை அறிமுகப்படுத்தலாமா இல்லை கதாநாயகியை அறிமுகப்படுத்தலாமா.
இக்கதையே கதாநாயகிக்கு சொந்தம் ஆனது தானே.
"வயலும் வயல் சார்ந்த இடத்திற்கும்" சொந்தகாரி நாயகி அதனால் என்னவோ பேச்சிலும் சரி பழகும் விதத்தில் சரி தண்மை கொண்ட குணம்.
மோனையும் எதுகையும் கொண்டு
கவிதை எழுத காகிதம்
தவிக்கும் அழகு அவள்!இதுவரை இலக்கணமும் இலக்கியமும் கண்டிடாத கவிதை-அவள்!
இரு வரி குறள்
சொல்லாத அதிகாரம் அவள்!பேசும் இமைகள்!
பிறை மதி விழியாள்!
சிறு வளையம் காதோரம்!
மழலை மொழி பேசும் இதழ்கள்.!மழலை மொழி
மட்டுமில்லை அவள் குணமும்.
கோபம் அவளின் இயல்பு
இருந்தும் அவள் கோவபடுவது அரிது.முரண்பட்ட கருத்தை முரண்பாடு இல்லாமல் கூறுவாள்!
அவள் அழகை கவிதை எழுத அந்த கவிதையும் ஏக்கம் கொள்ளும்.நான் பெரிதும் பெண்ணை மதிக்க காரணம் என் தாய் என் தங்கை இக்கதையின் நாயகி.
அவள் அடுத்தவருடன் அன்பும் மரியாதையும் பழகும் விதமும் நாயகனுக்கு அவள் மீது ஈர்ப்பு வர காரணம்.
நாயகனை பற்றி சொல்ல ஒன்றுமில்லை
காதல் என்ற வார்த்தையை இது வரை கனவில் மட்டுமே ரசித்தவன்.மலையும் மலைசார்ந்த இடமும் சொந்த காரன்.அதானால் ஏற்ற தாழ்வுகள் அவன் மனதில் அதிகம்.இழப்புகளை கண்டவன் தோல்வியால் துரத்தி அடிக்கப்பட்டவன்.குடுப்பத்தை விட்டு வெளியூரில் பணி புரிகிறான் தனிமை மட்டும் அவனுக்கு நண்பன்.
YOU ARE READING
காதலே💘
Romanceகாதல் ஒரு ஹர்மோன்களின் உணர்வு புணர்வமான ஒன்று. ஒரு குழந்தை கருவில் உருவாகும் போதே காதலும் அவனுடன் சேர்ந்து உருவாகிறது. ஒரு ஆண்ணின் முதல் காதல் தாயாகவும் ஒரு பெண்ணின் முதல் காதல் தந்தையாகவும் இருக்கிறார்கள்.இவர்கள் தவிர எந்தவொரு தொடர்பும் உறவு முறையி...