உடலுக்கும் உயிருக்கும்
தனியான இயக்கம் என்பது கிடையாது அது எனக்கு தெனீரின்
சிறு துளிகளை உயிரின் மேல் உடைக்கும் வேதாந்த இயல்பாய் சொல்லித்தருகிறது
இப்பிரபஞ்ச உருவின் அப்பால் ஏதேனும் என்னைப் போன்று யுகங்களைக் காட்டும்
ஒரு தனிப்பொருள் எப்போதும் என்னையே சிந்தித்திருக்கும்
அதில் என்னையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது
அது ஒரு பூ உதிர்தலை போல்
அல்லது பூமி அதிர் தலைப் போல் நிகழ்ந்து கொண்டிருக்கும் உனது செயல்கள் எப்போதும் தீர்ந்து போக அது அனுமதிக்காது
ஏனெனில் அதன் இயக்கம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது
இப்படித்தான் இருந்தது வாழ்வின் அருகாமை திசுக்கள்
அது என் கற்பனைக்கு எட்டவில்லை அதில் என் இறந்த உடலின் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எழுந்து வந்த ஒரு கல்லறை பேராகவும் இருந்திருக்கலாம்
வாழ்விற்கான நுட்பங்களும் மிகவும் மிகமிக மெல்லிதான நிகழிகளால் நீண்டுகொண்டே செல்கிறது
அது செல்கிறது அது சென்றுகொண்டே இருக்கிறது
ஒரு பூ உதிர்தலை போல்
அல்லது பூமி அதிர்தலைப் போல் நிகழ்ந்து கொண்டிருக்கும் இங்கேயும் இப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் நானும் அவ்வாறே எனக்கு என்னைப் புரியாமல்
நானும்
நகர்கிறேன்
இக்கணமும்
BINABASA MO ANG
குரலிழந்த கடவுள்
Poetryயாக்கையின் ஆழமான ஊடுருவலின் பின் நான் ஒரு அந்தகாரத்தில் இறந்திருக்க வேண்டும் அல்லது நீ இந்த ஈரலிப்பான உதடுகளை சுவைக்காதிருந்திருக்க வேண்டும் இவ்விரவில் இரண்டும் ஒன்றே.