முருகப்பெருமானின் வருகைப்பாடல்

47 0 0
                                    


  சித்தர் ஆறுமுகத்தம்பிரானின் பதிவுத் தளத்தில் முதல் பாடலாக அழகுத் திருமுரு(ம)கனை நம்மிடமே இருத்திக் கொள்ள வைக்கும்  அற்புதமான ஒரு பாடலைப் பார்ப்போமா

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

  சித்தர் ஆறுமுகத்தம்பிரானின் பதிவுத் தளத்தில் முதல் பாடலாக அழகுத் திருமுரு(ம)கனை நம்மிடமே இருத்திக் கொள்ள வைக்கும் அற்புதமான ஒரு பாடலைப் பார்ப்போமா.... 

 

பச்சை மயில் வாகனனே


பச்சை மயில் வாகனனே சிவ
பால சுப்பிரமணியனே வா - இங்கு
இச்சை இல்லாம் உன்மேல் வைத்தேன்
எள்ளளவும் ஐயமில்லையே -(பச்சைமயில்)


கொச்சை மொழியானாலும் - உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் - இங்கு
சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா - எங்கும்
சாந்தம் நிலவுதப்பா -(பச்சைமயில்)

வெள்ளமது பள்ளந்தனிலே பாயும்தன்மை போல் உள்ளந்தனிலே நீமெல்ல மெல்ல புகுந்து விட்டாய் என்கள்ளமெல்லாம் கரைந்ததப்பா - (பச்சைமயில்)
நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அதில்
நேர்மை என்னும் தீபம் வைத்தேன் - நீ
செஞ்சிலம்பு கொஞ்சிட வா முருகா
சேவற் கொடி மயில் வீரா - (பச்சைமயில்)
ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தருந் தேவா - நீ
ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா
எங்கும் நிறைந்தவனே- (பச்சைமயில்)

அலைகடல் ஓரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே - நீ
அலையா மனந் தந்தாய் - உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம் - (பச்சைமயில்)


இவ்வழகிய பாடலை மனதி்ல் இருத்தி மனனம் செய்து பாட உங்கள் உள்ளம் உருகுவதை உணரலாம். அந்நிலையில் அவ்வழகன், ஞானக்குமரன் உங்கள் அருகில் இருப்பதை உணரலாம். இதோ ஒரு முருகனடியாரின் மழலைக் குரலைக் கேட்டு மகிழுங்கள்.


சித்தர் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் வாழ்க்கைச் சரித்திரம்Where stories live. Discover now