சிறுகதை

143 15 7
                                    

தாமரைக் குளந்தனில் மலர் கொடிகள் சூழ்ந்து கிடக்க பனிதுளி தாமரை மலர்களை அள்ளி அனைத்த நேரமது. வலப்பக்கம் ஒருகளித்து படுத்த சுகம் வெறுத்து போக இடப்பக்கம் ஒருகளிக்க முன்வந்தாள் வெண்மதி. ஏனோ மல்லாந்து படுத்திட நேரமுமில்லாமல் தலைக்குப்புற படுத்திட காலமும்  கனியாமல் தன் கண்களை அலக்கழித்து கொண்டிருந்தான் வளன். எதை எதையோ யோசிக்க தூக்கம் அவன் கண்ண கவ்வாமலே கிடந்தது அவ்வப்போது மனைவியின் முகத்தையும் அவள் இடுப்பின் வளைவையும் கண்டு மனம் வெகுண்டான்.  அவளோ வண்ண கனவுகளால் மெய்மறக்க தன் சப்தமிடும் வளைவிகளை கொண்டு தன் அடி வயிற்றை மெல்ல அனைத்தாள். அவள் முழுக இன்னும் ஈர்இரண்டு திங்கள் ஆகும்படியால் அவள் முகம் சற்றும் குறையாத அவாவை அள்ளி பூசியிருந்தது.

யாருக்கும் எளிதில் இந்த வரத்தை அவன்  வழங்காத போதிலும் இந்த வரத்தை பெற்றமையால் வளனின் உள்ளம் பெரிதும் இன்பம் கொள்ளாது இருந்தது. அவன் மனம் சஞ்சலத்தில் மூழ்கி தவித்தது. ஆசை காதல் மனைவியின் முகம் கூட மறையும் மட்டும் அவன் புத்தி எதோ ஒன்றில் மழுங்கி கிடந்தது.

நூற்றாண்டின் ஆண் மகன் என்ற போதும் இவன் மூதாதையர்களான மந்தி மதி இவனை ஆட்கொள்வதில் எந்த தாட்பறியமும் தேவையில்லை தானே.

விடியும் முன் பனி நேரம் தொடங்கியும் அவன் கண்கள் அயரவில்லை அவன் நாசி பெருமூச்சிட தயங்கவில்லை ஆனால் அவன் காதுகளோ எதோ ஒன்றை முனுமுனுத்து கொண்டே இருந்தது. அது அவன் அலுவலக கேலி உரையாடல்கள்.

"டேய் ராஜ் என்னடா உனக்கு ஆம்பள பிள்ள தான் பிறக்கும்னு சீன் போட்ட இப்ப என்னாச்சு

நான் தான் சொன்னேன் ல நீ தான் கேட்கவே இல்லை

ம்ம் அடுத்து வளன் தான்" என்ற பாபுவின் வார்த்தைகளுக்கு இவ்வாறு மறுமொழிந்தான் ராஜ்.

"என்னடா பொம்பள பிள்ள புறந்தா இப்ப என்னாங்குற"

"என்னாவா ! அசால்ட்டா கேக்குற இப்பனில்ல அப்ப இருந்தே பொம்பள பிள்ள பிறந்தாலே ஒவ்வொருத்தனும் கதறுவானுக" என பாபு கூற.

"டேய் நீ கிராமத்துல பொறந்து வளர்ந்ததுனால அப்படி பேசுர"

"ஆமா சிட்டில நீங்களாம் செய்யவே மாட்டீங்க! போடா டேய் !

இங்க பாரு பொம்பள பிள்ள பிறந்தா அது படிக்க வச்சு, பெரிய பிள்ள ஆன சடங்கு செஞ்சு, கல்யாண பண்ணி வச்சு சீர் சினத்தி கொடுத்து, வளைகாப்பு பண்ணி ஒரே வேலை தான் அதுமில்லாம அத கட்டி கொடுக்குற வரைக்கும் பொத்தி பாதுகாக்கனும் நடுவுல எவனாயாவது இழுத்து ஒடுற கேஸ்லாம் இருக்கு.

இதலாம் விட ஆம்பள பிள்ள பெத்தெடுத்த தனி கெத்து தான டா!!

என்னடா வளன் நான் சொல்றது சரிதான" என்று ராஜ் கூறி முடித்த பிறகும் அதற்கு பதில் கூற மனமில்லாது வளனின் நா நன்கு அடைந்திருந்தது அவன் செவிகளும் கூட அதனால் தான் பாபுவின் மறுமொழி அவன் காதுகளை துளைகாமலே போயிற்று.

அந்த காலை விடியல் அவ்வளவாக தெளிச்சியடையவில்லை. வழக்கத்திற்கு மாறாக பேருக்கேற்றார் போல நிரைமாத நிலவையொத்த மஞ்சள் பூசி பூர்ண சந்திர நிலவொளி ததும்ப சற்று முன் கண்ணயர்ந்த காதல் கணவனை எழுப்பிட வந்தாள். அவள் முகத்தில் அப்படியொரு பிரதிபலிப்பு அவள் குரலில் அத்துனை வாஞ்சை கொள்ள "வளன் எந்திரி பா, ஆபிஸ் போனுல" என்று அவள் கூறும்போதே அந்த குறிப்பிட்ட உரையாடல் மீண்டும் அவன் செவியை எட்டியது. இருந்தும் மகிழ்ச்சியின் ழகரம் ஐகாரமாக ஒலிக்க வெக்கம் மேலிட "அம்மா அடுத்த மாசம் வளைகாப்பு பண்ணலாம் சொன்னாங்க" என அவள் கூறியபோது மஞ்சள் கன்னத்தில் சிவப்பு ரேகைகள் பரவின அவனுக்கோ அது கண்களில் பரவியது.

- தொடரும்

மெய்தீண்ட ஸ்பரிசம்Where stories live. Discover now