முடிவுரை

162 13 3
                                    

அந்த சிவந்த கண்களுக்கு தெரியவில்லை தான் எதற்காக சிவக்கின்றோம் என்று அவ்வளவேன் அவனுக்கே அந்த அன்னிச்சைகளின் அசைவுகள் புரிந்து கொள்ள முடியவில்லை.‌ அவளோ அவன் முகத்தை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள். அவன் ஒற்றை வார்த்தைக்காக வெகு நேரம் காத்திருந்தாள். 'ம்ம்ம்' என்ற ஒற்றை வார்த்தை வந்து விழுந்தது ஆனால் அவள் அதுவல்லவே.

மெல்ல எழுந்து சொம்பல் முறிக்கையில் அவன் காதோரம் வந்து இவ்வாறு செப்பினாள் "இன்னிக்கு செக்கப் போனும்"

"நான் வரல! அம்மாவ கூட்டிட்டு போ"

"எப்பவும் நீங்க தான வருவீங்க" என அவள் கேட்கயில் அந்த வாக்கியத்தில் அத்துனை கனிவு‌.

"அதான் சொல்றேன்ல அம்மாவ கூட்டிட்டு போ" என அவன் கூறும் போதே முற்றத்தில் கொத்தி தின்ற புறாக்கள் தன் இணையை கூட்டிட்டு பறந்தன.

புறாக்களின் அந்த சலசலப்பை வாசுகி பெரிதாக ரசிக்க முடியவில்லை.

"என்னடா! காலையிலே கத்திட்டு இருக்க" என்று அவள் அதட்டலில் வளனுக்கு மற்றுமொரு சோம்பல் முறிப்பு.

"இன்னிக்கு செக்கப் போனுமாம்...
நீ கூட்டிட்டு போய்ட்டு வா"

"என்னடா புது பழக்கம்! புருஷனா லச்சணம் கூட்டிட்டு போ...

அடுத்த மாசம் விசேஷம் வேற வச்சு அவ அம்மா வீட்டுக்கு அனுப்பனும்

ஒழுங்க போய்ட்டு வா

நீ ரெடியா இருமா" இவ்வாறு வாசுகி தன் கூற்றை முடிக்கும் முன்பே தாயின் சொல்லை தட்டாது சென்றான்.

அன்று காக்கை கறைந்ததற்கு அது தான் காரணமோ என்னவோ பங்கஜம் அந்த காலை வேளையிலயே மஞ்சள் குங்கும முக வனப்போடு வந்துவிட்டாள். 'வாசுகி வாசுகி' என்று கத்திக்கொண்டே நுழைந்தாள்.

"ஏன்டிமா கிளம்பிட்டியோனோ" சொல்லும் போதே அந்த மஞ்சள் முகம் வெண்மதி யின் மதி வதனத்தில் விழுந்தது.

பங்கஜத்தை பார்த்தவுடனே வெண்மதியின் கண்கள் அவள் பாதங்களை தேடியது சாஷ்டாங்க நமஸ்காரமாக இல்லாவிட்டாலும் நமஸ்கரிக்க முன்வந்தாள் இருந்தும் அவள் ஆசிர்வாதங்கள் வெண்மதியை சேர என்றும் தயங்கியதில்லை.

மெய்தீண்ட ஸ்பரிசம்Where stories live. Discover now