சுவாசம்- 1

18.7K 327 171
                                    

அமேசான் கிண்டிலில் பதிப்பிப்பதற்காக இக்கதை இங்கிருந்து நீக்கப்பட்டு விட்டது. சாம்பில் பகுதிகள் மட்டுமே இங்குள்ளது.

இந்த நாளுக்காக எவ்வளவு நொடிகள், நிமிடங்கள், தினங்கள்... காத்திருந்தேன்... கடைசியாக என்னக்கே எனக்காக என் மீது அளவுகடந்த பாசம் செலுத்தவும் ஒருவள் வரப்போகிறாள். அதுவும் என் மனம் கவர்ந்தவள், என்னை முழுதாக அவள் புறஅழகு மட்டுமல்லாது அகஅழகால் கட்டிப்போட்ட என் காதலி. என் மகி.. என் மகிழினி...

வாழைத்தோரணங்கள் வாசலில் வரவேற்க, நாதம் அங்கிருந்தவர்களுக்கு புத்துணர்வு அளிக்க மறு புறம் புரோகிதர் மந்திரங்கள் முழங்க அக்னி மூட்டிக் கொண்டிருந்த மண்டப அறையில் தான் மணமகனான இன்பச்செல்வன், எஸ்.என் க்ரூப்ஸ் ஆஃப் கம்பெனிஸின் கடைசி வாரிசு தான் இத்தனையும் தன் மனதில் ஓடவிட்டிருந்தான்.

"என்ன மாப்பிள்ளை சார்...இப்போ சந்தோஷமா?" என்றபடியே உள்ளே வந்தார் இன்பச்செல்வனின் தாய்மாமன் விஸ்வநாதன்.

"மாமா..." என்று பிரகாசித்தவன் அவரை அணைக்க "ஐ ஆம் சோ ஹாப்பி" என்றான் அவரின் கன்னத்தில் முத்தமிட்டு.

"அடேய்... என்னடா இது சின்ன பிள்ளை மாதிரி...உன் பெண்டாட்டிக்கு கொடுக்கவும் ஸ்டாக் வைத்துக் கொள்" என்றார் தன் கன்னத்தை துடைத்துக் கொண்டு.

"அதெல்லாம் நிறைய லோட் இருக்கிறது..." என்று இன்பச்செல்வன் பல்லை காட்டி கண்ணடிக்க "படவா..." என்று விஸ்வநாதன் அவன் கன்னத்தை பாசமாக தட்டினார்.

"உன்னை இப்படி பார்க்க எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? உனக்கென்று ஒரு சந்தோஷமான வாழ்க்கை அமைய வேண்டுமென்று நான் வேண்டாத தெய்வங்கள் இல்லை" என்றவரின் கண்கள் கலங்க அதை துடைத்து விட்டது ஒரு கை.

"அப்பா...என்ன இதெல்லாம்...உன் அமுல் பேபிக்கு கல்யாணம் இன்று போய் அழுகிறாய்" என்றவாறே இன்பச்செல்வன் தோள் பற்றி அவன் பக்கத்தில் நின்றான் ரிஷிவர்தன் விஸ்வநாதன்.

நீயடி என் சுவாசம்!           |முடிவுற்றது|✔️Donde viven las historias. Descúbrelo ahora