சுவாசம்- 2

7.6K 322 129
                                    

"அவளை பழிவாங்கத் தான் அப்படி செய்தேன்..." என்ற இன்பச்செல்வனின் பதிலில் அவ்வரையே அமைதியானது.

"என்னடா உலருகிறாய்? அவளை காதலித்து அவர்கள் வீட்டில் கஷ்டப்பட்டு சம்மதம் வாங்கி எல்லாம் கை கூடும் நிலையில் இப்படி சொல்கிறாய்? டேய் ரிஷி இவன் ஏதும் குடித்திருக்கிறானா?" என்று அதிர்ச்சியில் விஸ்வநாதன் தன் மகனிடம் கேட்க அதற்கும் அவனே பதிலளித்தான்.

"எல்லாமே நாடகம்... வேண்டுமென்றே அவளை நம்பவைத்து காதலில் விழவைத்தேன். அவளை அவமானப்படுத்தவே இதெல்லாம் செய்தேன்" என்று நாக்கில் நரம்பில்லாமல் உணர்ச்சியற்று குரலை உயர்த்தி பேசினான் இன்பச்செல்வன்.

"எதற்கு அவளை பழி வாங்கவும்  அவமானபடுத்தவும் நினைக்கிறாய்?" என்று விஸ்வநாதன் வினவினார் அவனின் பேச்சை நம்பமுடியாமல்.

"என்னை முதலில் அவமானப்படுத்தியது அவள் தான் அதற்கு பழி தீர்க்க வேண்டும்" என்றான் அவர்களுக்கு முதுகை காட்டி.

"டேய் என்னடா இப்படி பேசுகிறாய்? உண்மையை சொல் உன் வீட்டில் உள்ளவர்கள் யாரேனும் மிரட்டினார்களா? அவர்களுக்காக தான் இதெல்லாம் செய்கிறாயா? ஏன்டா நீயே உன் வாழ்வில் மண்ணை வாரி தூவப் பார்க்கிறாய்?" என்று அவனை உலுக்கினான் ரிஷி.

ஆக்ரோஷமாக அவனை தள்ளிவிட்ட இன்பச்செல்வன் "யாரும் என்னை மிரட்டவுமில்லை மிரட்டவும் முடியாது. அவளை பழிவாங்கத் தான் இத்தனை தினங்கள் அவளை காதலித்தது போல் நடித்தேன்" என்று சொல்லவும் அவன் அம்மா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

"இன்னும் வெளியில் வராமல் என்ன செய்கிறீர்கள். எங்களையெல்லாம் காக்க வைப்பதில் உங்களுக்கு அவ்வளவு சந்தோசம்..." என்று கூச்சலிட்டார் சாந்தலஷ்மி.

"ஹான்...உங்களுடன் இருந்து இருந்து உங்களது குணம் அவனிடமும் ஒட்டிக்கொண்டது" என்றார் விஸ்வநாதன் எலக்காரமாய்.

"தேவையில்லாமல் பேசாதீர்கள் அண்ணா..அவனை ஒழுங்காக சீக்கிரம் மேடைக்கு வரச் சொல்லுங்கள்" என்று கூறி அங்கேயே நிற்க ரிஷியும் விஸ்வநாதனும் என்ன செய்வதென்று தெரியாது விழி பிதுங்கினர்.

நீயடி என் சுவாசம்!           |முடிவுற்றது|✔️Donde viven las historias. Descúbrelo ahora