1. தன் மகளின் வரவு!

8.5K 260 177
                                    

ஈருயிராய் இருந்த தன் மனைவி ப்ரசவ வார்டினுள் சென்று ஒரு மணி நேரம் ஆகியும் நல்ல செய்தி வரவில்லையே என்று தனக்கு தெரிந்த தெரியாத எல்லா கடவுளையும் வேண்டி கொண்டிருந்தான் இந்த கதையின் நாயகன்.

தன் இதயத்துடிப்பு தனக்கே கேட்பது போல் உணர்வு தோன்ற உள்ளுக்குள் தனக்கே பிரசவம் நடப்பது போல் ஒரு சொல்லமுடியாத பயம் வலி எல்லாம் சேர்ந்து உடல் நடுங்க சுவரில் கைகளை கட்டியபடி கண்களை மூடி சாய்ந்து நின்றிருந்தவனை கலைத்தது ஒரு அந்நிய குரலோடு இன்னொரு மெல்லிய அழுகை "சார்! உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு. இந்தாங்க" என்று தன்னிடம் பிறந்து சில நொடிகளே ஆன தன் குழந்தையை செவிலியர் தர...

தன் உயிர்குருதியில் முளைத்த சின்ன ரோஜா மொட்டு இதழ் விரித்து தன் பட்டு போன்ற சின்னஞ்சிறு கை கால்களை உதைத்து தன் மெல்லிய அழுகையால் இந்த உலகிற்கு வந்துவிட்டதை உணர்த்துவது போல் இருக்க கண்களில் பொங்கும் ஆனந்த கண்ணீர் ஆறாய் வழிந்தோட தன் நடுங்கும் கரத்தினால் வாங்கி கொண்டு உச்சி முகர்ந்தவன்.

"என்

உயிர்குருதியில் ஜனித்து

என்னவளின்

உயிர்கருவில் குடிகொண்டு

ஈரைந்து மாதங்கள் வளர்ந்து

வெளிவந்த எம் செல்வி நீயே?

என்னை ஈன்றெடுக்காத

தாய் நீயே!"

சடாரென தலை நிமிர்த்தி "சிஸ்டர் என் மனைவி எப்டி இருக்காங்க? நல்லா இருக்காங்கல்ல?"என்றான் நடுங்கும் குரலில்...

பின்னோடு வந்த டாக்டர் "சாரி டு செ திஸ் சார்! எவ்ளோ முயற்ச்சி பண்ணியும் நாம பயந்த மாதிரியே நடந்துருச்சி அவங்கள எங்களால காப்பாத்த முடியல. வெரி சாரி! மனச தேத்திகொங்க" என்றார்.

தன் தலையில் இடி விழுந்ததை போல் உணர்ந்தவன் இந்த உலகமே தன் காலடியில் இருண்டு கிடப்பதை போல் தோன்ற சற்று முன் நடந்ததை நினைத்தான்....

மழையோடு  நம் காதல்! CompletedWhere stories live. Discover now