special update <3

9.3K 216 95
                                    

💕படிகளில் அமர்ந்திருந்த சனாவின் தங்கைக்கும் அவளின் மாமன் மகளுக்கும் அரையும் சத்தம் கேட்க... திவ்யாவை(சனாவின் தங்கை)இருவரும் கேள்வியுடன் பார்த்தனர்...

எப்பவும் போல தீபக் அண்ணா  அவள ஏதாவது டென்ஷன் பண்ணிருப்பாரு அதா இப்போ  நல்ல வாங்குறாரு என்று அவள் சொன்னதை கேட்டு இருவரும் சிரித்தனர்...

சரி வாங்க நம்ப என் ரூம்ல போய் கேரம் விளையாடலாம் என்றபடி திவ்யா அவர்களை உள்ளே அழைத்து சென்றால்(நம்ப ஆளுங்களுக்கு ப்ரைவசி வேணும்லா😋)

தான் வந்ததை பார்த்தும் தன் புறம் திரும்பாமல் வேண்டும் என்றே ஏங்கோ பார்த்து கொண்டு இருந்த சனாவின் கன்னத்தை பற்றி மன்னிப்பு கேட்ட தீபக்கே இப்போது அரை வாங்கிய கன்னத்தை தேய்த்தபடி நின்றிருந்தான்...

அவனை ஒரு பார்வை பார்த்த சனா மீண்டும் அவனை அடிக்க துவங்கினால்....

ஒரு ஒரு அடிக்கும் அவள் ஐ ஹேட் யூ சொல்ல...அடித்த அவள் கரத்தை பற்றி முத்தமிட்டவாறு அவன் ஐ லவ் யூ சொன்னான்...

அவன் நெஞ்சில் அழுதபடி அடித்துக் கொண்டிருந்தவள் "ஐ ஹேட் யூ இடியட்" என அழுத்தமாக சொல்ல...அவளை இழுத்து கட்டியணைத்தவன் "ஐ லவ் யூ பேபி" என்றான்...

சில நிமிடங்கள் தன்னிலை மறந்து அணைத்தபடியே இருந்தனர்...

சனா அவனை தள்ளி நிற்க வைத்து...நான் கொஞ்சம் பேசனும் எனச் சொல்ல அதை அப்படியே கூட சொல்லலாமே என்றபடி மீண்டும் அவளை அணைக்க நெருங்கினான்...

டேய் அங்கயே நில்லு!அவனை எச்சரித்தவள் மீண்டும் தொடர்ந்தால்...இந்த முறையும் நம்ப நடந்த வாக்குவாதத்தையும்,சண்டையையும் மறந்துட்டு சேர்ந்தோனா அது இன்னும் கொஞ்ச நாளுல ஒரு சண்டையா வந்து நிக்கும்...சோ இப்போவே அதெல்லாம் பேசி ஒரு முடிவு எடுத்துடலாம் என்றாள்...

அவன் சரி என்றவாறு தலையசைக்க...அவள் நான் மேரேஜ்கு அப்பறம் கண்டிப்பா வர்க் பண்ணுவ எனக் கூற உன்னோட விருப்பம் என்றான்...

இதழின் மௌனம்(completed√)Wo Geschichten leben. Entdecke jetzt