சமூகத்தில் நம் பெண்கள்

354 12 15
                                    

மாதராய் பிறந்திட மாதவம் செய்திட வேணும் என்பது சான்றோவாக்கு!
உண்மைதான்!
ஆனால் பெண்ணினம் இன்று எப்படி போற்றப்படுகிறது!

பெண்களே எப்படி நடந்து கொள்கிறார்கள்??

நாகரீகம் என்ற பெயரில் நாலு முளத்துண்டு சுற்றிக் கொண்டு உலா வருகிறார்கள் இளம் பெண்கள்!


எனக்கு ஒரே ஒரு சந்தேகம் அந்தப் பெண்ணின் வீட்டிலும் அப்பா அண்ணன் மற்றும் பிற ஆண் உறுப்பினர்கள் இருப்பார்கள்தானே? அவர்கள் எப்படி இதை அனுமதிக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய நீண்டகாலகேள்வி! யோசனை!

எல்லாப் பெண்களையும் நான் குறிப்பிடவில்லை! அப்படி நடந்து கொள்ளும் பெண்களைத்தான் குறிப்பிடுகிறேன்!

சம உரிமை என்ற பெயரில் குடிக்கவும் கூட துணிந்து விட்டார்கள் என்பது மிகவும் வேதனைக்குறிய விஷயம்!

 
எங்கே போய்க கொண்டிருக்கிறது நமது சமூகம்? பெண்களை போற்றும் இந்த பாரத மண்ணில் இப்படி எல்லாம் ஏன் நடக்கிறது?

பாரம்பரியம் பண்பாடு கலாச்சாரம் என்று வாழ்ந்த நம் பெண்ணினம் பாதை மாறிப் போனதேன்??

கல்வி கற்கவே அனுமதிக்கப் படாமல் இருந்த காலம் மாறி  இன்று எல்லாத்
துறையிலும் பெண்கள் ஜொலிப்பது ஒருபுறம் மனதுக்குள் பெருமிதம் கொள்ளும் அதே சமயம்…

 இப்படியும் சில பெண்கள் நடந்து கொள்வதை பார்க்க சங்கடமாய் வேதனையாய் இருக்கிறது!

பெண்களே உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில்தான் உள்ளது! ஆனால் அதை உணராமல் உங்கள் எழிலை வெளிச்சம் போட்டு வீணாய் விபரீதங்களை விலை கொடுத்து வாங்காதீர்கள்!

அதிலும் இன்று வலைதளம்  விரிந்து விட்ட நிலையில் உங்கள் புகைப்படங்களை பகிரங்கமாக பதிவு செய்து அதனால் விபரீதங்கள் நேரவும் காரணம் ஆகிறீர்கள். இதற்கு எத்தனையோ உதாரணங்கள் வந்துவிட்ட பின்னும் மாற்றம் தான் இல்லை. 

சுதந்திரம் அடைந்த நாடு என்றாலும் பெண்களை பொறுத்தவரை இன்னும் நிறைய விஷயத்தில் அது முழுமையாக கிடைக்கவில்லை. 

இன்று நீங்கள்,  உங்களை பார்த்து நாளைய சந்ததியினர் பின்பற்ற நல்லதோர் வழியினை காட்டும் பொறுப்பில் இருப்பவர்கள்..

இனியேனும் சற்று சிந்தித்து செயல்படுங்கள் சகோதரிகளே.
 
உங்கள் நலனில் அக்கறை உள்ள ஒருத்தி……

பெண்ணே நீ எங்கே ??Onde histórias criam vida. Descubra agora