தோழியாய் சிநேகிதியாய்...

110 6 9
                                    

திருமணம் என்பது இரு மனங்கள் மட்டும் இணையும் விழா அல்ல. இரு குடும்பங்கள் இணங்கி நடத்தும் விழா.

இருபக்கத்து உறவுகளை மணமக்கள் அரவணைத்து போனாலே பல பிரச்சனைகள் முளைக்காது.

கணவனின் உறவுகளை தன் உறவாய் ஒரு பெண் எளிதாக ஏற்றுக் கொள்வாள். ஆனால் ஆண்கள் அப்படி இல்லை. அதற்கு காரணம் அவனது வளர்ப்பு.

ஆண்பிள்ளையை நீ யாருக்கும் குறைவில்லை.  பெண் வீட்டாரிடம் நெருங்கி பழகினால் உனக்கு மதிப்பு இருக்காது. இதுபோன்ற போதனைகளால்  அவன் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டாமல் நிற்கிறான்.

அதுவே பெண்ணிற்கு என்றால் நீ எல்லாரையும் அணுசரித்து போகவேண்டும். மாமியார் மாமனார் மெச்சும்படி நடந்துகொள்ள வேண்டும்... இது எந்த விதத்தில் நியாயம்? 

பெண்ணுக்கு மாமியார் அம்மா மாதிரி என்றால் அந்த பெண்ணை பெற்ற அம்மா அந்த ஆணுக்கு அன்னை போலத்தானே?  இது போன்ற வேறுபாடு காரணமாகத்தான் ஆண்களுக்கு இயல்பாக இருக்கும் நல்ல குணமும் காணாமல் போய் மாப்பிள்ளை என்ற தோரணையாக வந்துவிடுகிறது. 

திருமணம் ஆனதும் எங்கே மகன் நம்மை விட்டு மனைவி பின்னால் சென்று விடுவானோ என்ற அச்சம் பல தாய்மார்களுக்கு இருக்கிறது. இங்கே ஒரு விஷயத்தை அந்த மாமியார்கள் மறந்து போகிறார்கள்.

அவர்களும் ஒருவருக்கு மனைவியாக வந்தவர்தான் என்பதுதான் அது. அவருடைய மாமியாருக்கும் இதே அச்சத்தின் காரணமா அவர் எப்படி நடந்து கொண்டார் என்று அறிந்தவர் தானே? அப்போது இருந்த அதே மனநிலையில் தானே புது மருமகளும் இருப்பாள்.

இரண்டு பெண்களின் நடுவே சிக்கிக் கொள்வது ஆண்தான். அவர்கள் யார் பக்கம் பேசுவது என்று தவிப்பதற்கு காரணம் இருவரும் முக்கியமான உறவுகள் என்பதுதான்.

இருவருமே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியவர்கள். . வாழ்க்கை முழுவதும் உடன் வாழப்போகிறவள் மனைவிதான். அதனால் மனைவியிடம், அன்னையை பற்றி சொல்லி புரிய வைக்கவேண்டும்.  அதேபோல் அன்னையிடமும் மகன் விஷயத்தை விளங்க வைக்க வேண்டும்.

இருவருக்கும் சமமான உரிமை அளித்து நடத்தவேண்டும்.  இதில் மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒரு கடமை இருக்கிறது.  அவர்கள் இருவரும் கூடிய மட்டிலும் இணக்கமாக நடந்து கொண்டாலே நிறைய பிரச்சினைகள் எழாது. இது அனுபவம். 

மனைவியும் சரி அன்னையும் சரி, வீட்டிற்குள் ஆண்மகன் நுழைந்ததும் புகார் பத்திரம் படிக்க கூடாது. அந்த மாதிரி சமயத்தில் அவனால் சரியாக முடிவு எடுக்க முடியாது போய்விடுகிறது. அங்கே தான் அவன் தடுமாறிவிடுகிறான். அவன் கோபத்தை மனைவியிடம் தான் காட்டுவான். (சில ஆண்கள் அன்னையிடம் காட்டுவதும் உண்டு ) மொத்தத்தில் குடும்ப அமைதி குலைந்து போகிறது. அதனால்
உறவில் விரிசல் உண்டாவது நிச்சயம். அதனால் யாருக்கு நஷ்டம்?

மனைவி ஒரு கணவனை குறுகிய காலகட்டத்தில் புரிந்து கொள்வாள். ஆனால் கணவனுக்கு மனைவியை புரிந்து கொள்ள அதிக அவகாசம் தேவைப்படுகிறது.

கணவனுக்கு மனைவி முதலில் ஒரு தோழியாக இருக்கவேண்டும்.  அதைவிட எந்த பிரச்சனை என்றாலும்  அதை சொல்வதால் ஏற்படும் சாதக பாதகங்களை அலசிப் பார்ப்பது அவசியம். முக்கியமாக பொறுமை மிகவும் தேவை.

நாத்தனார்கள் பற்றி  அடுத்த பதிவில் பார்க்கலாம்.

(பின் குறிப்பு : இது எனது கருத்து.  நிறையோ குறையோ அவசியம் பகிரவும் நட்பூக்களே! )





பெண்ணே நீ எங்கே ??Donde viven las historias. Descúbrelo ahora