தன் கைபேசியை எடுத்து பார்த்தவன் அது ஏதோ சொல்ல வருவதை போல் உற்று பார்த்து கொண்டு இருந்தான்
" சார் மீட்டிங்கு டைம் ஆச்சு போலாமா.. "
மூச்சை இழுத்து விட்டவன் தலையை அழுந்த கோதி விட்டு
" ம்ம்ம்... வாங்க.. " என்று முன்னே நடந்தான்" இதெல்லாம் சரி பார்த்துட்டு எனக்கு மெயில் பண்ணிடுங்க "
"ஷ்யோர் சார் நைட் மெயில் பண்ணிடறேன் "
" ஓகே தென்.. ஐ வில் டேக் மை லீவ்" என்று அவ்விடம் விட்டு அகன்றார் அவனின் டெக் லீட்
உள்ளத்தில் பெருமூச்சு எழ சோர்வாக தன் அறை நோக்கி செல்லலானான்
அப்பொழுது "சார் "என குரல் கேட்க
அங்கே ப்யூன் நின்று கொண்டு இருந்தான்" என்ன ராஜுணா ? "
"உங்கள பாக்க ஒருத்தர் மதியத்துல இருந்து காத்து இருக்காங்க... மீட்டிங் ஆல இங்கேயே இருக்க வச்சேன் "
நெற்றி சுருக்கி யோசித்தவன் வெயிட்டிங் ஹாலை நோக்கி சென்றான்...
அங்கே இருந்தவளை கண்டவன் அதிர்ந்து உறைந்து போனான்...
"அத்தான் " வார்த்தை மென்மையாக அவனை வருடியது...
எங்கு இருக்கிறோம் என்று மறந்தவன் ஒரே அடியில் அவளை தன் கைவளைவில் நெருக்கி இருந்தான்.
சற்று நேரத்தில் அவளை விடுவித்தவன் கை அணைப்பிலேயே வைத்து கொண்டு அவள் விழியை நோக்கினான்
அவள் இதழில் புன்னகையும் கண்ணின் ஓரம் கண்ணீருமாக அவனை பார்த்தும் பார்க்காமலும் இதழை கடித்து தலை குனிந்தாள்
" பேபி.. உதட்ட கடிக்காத.. அப்புறம் எதுக்கும் நான் பொறுப்பு இல்ல " என கிறக்கமாக அவள் காதில் கிசுகிசுத்தான்
அவள் முகம் இன்னும் செம்மையேற " போங்க அத்தான் " என அவனின் அணைப்பிலிருந்து விலகினாள்
அவள் விலகலை மறுத்து அவளை இழுக்க முற்பட்டவன் அப்பொழுது தான் தன் சுற்றம் அறிந்தான்
தன் தலையை கோதி விட்டு மெல்ல சிரித்தவன் " கொல்லறடி என்ன... வா போலாம் " என்று அவள் கை பற்றி நடக்கலானான்.
இருவர் இதயமும் ஒரே சீராக துடிக்க இரண்டு உள்ளங்களும் மோன நிலையில் ஆழ்ந்து இருந்தது.