எங்கும் இருள் சூழ்ந்திருக்க தெருவிளக்கின் மங்கிய ஒளியில் அந்த சவப்பெட்டி ஜொலித்தது. மந்திரத்திற்கு கட்டுபட்டதை போல இருந்த அந்த இருவரும் தங்கள் கைகள் தோண்டி எடுத்த பொருளை நம்ப முடியாத திகிலுடன் பார்த்த வண்ணம் இருந்தனர்.காற்றிலே மிதந்து வந்த சுகந்தமனம் அவர்களை மதியிழக்கச்செய்து கொண்டிருந்தது. அதுவரை மந்திரத்திற்கு கட்டுப்பட்டிருந்த கைகளில் சிறு விடுபட்ட உணர்வு தென்பட சிறு ஆசுவாசமூச்சு விட்ட மது நந்தனை அழைத்து, " இங்க என்ன நடக்குது நந்து எனக்கு பயமா இருக்கு ," என்று நடுங்கிய குரலில் வினவ அவளது பயத்தை அறிந்து கொண்டவன் மெதுவாக அவளது கைகளை பற்றி தைரியமூட்டினான்.
அவனது தொடுகை தந்த தெம்பில்," நம்ம இந்த இடத்தை விட்டு எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போயிடுவோம் நந்தன்," என்று கூறிய மது அவனது கைகளை பற்றி அவ்விடம் விட்டு நகர துவங்குகையில் ஒரு மெலிதான முனகல் சத்தம் இருவரின் கால்களையும் அவ்விடத்தில் வேரிட செய்தது.
மெலிதாக துவங்கிய அந்த முனகல் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக தனது சத்தத்தை அதிகரித்து அவர்களின் அருகிலே கேட்க துவங்கியது.
தங்கள் அருகில் கேட்ட அந்த சத்தம் வந்த திசையை ஆராய்ந்த அவர்கள் அது சவப்பெட்டியின் உள்ளிருந்து வருவதை உணர்ந்து திக்பிமை அடைந்தனர்.
வேகமாக சவப்பெட்டியை நோக்கி சென்ற தன்னவளின் கைகளை பிடித்தது நந்தனின் கைகள். அவனை கேள்வியுடன் நோக்கியவளை," அறிவிருக்கா?? என்ன காரியம் செய்யப்போற நீ??" என்று கோபமாக கேட்டான்.
" அந்த பெட்டியில இருந்து தான் சத்தம் வருது , அவங்க உயிர காப்பாத்த நமக்கு ஒரு சந்தர்பம் இருந்தா காப்பாத்தளாம் ல?? ஏன் என்னை தடுக்குறீங்க??" என்று புரியாமல் வினவியவளை பார்த்த நந்தனின் நிதானம் பறக்க துவங்க மீண்டும் ஒரு முறை அமைதியாக அவளிடம்," வர்ஷீ.....இங்க பாரு நாம நிக்கிறது ஒரு குளக்கரை அப்பறம் அந்த பெட்டி அது சாதாரண பெட்டி இல்லை அது ஒரு சவப்பெட்டி இங்க யாரும் சடலத்தை அடக்கம் செய்ய மாட்டாங்க, அப்படியே அடக்கம் செஞ்சிருந்தாலும் அது சட்டவிரோதமானதா தான் இருக்கும், இரண்டாவது இறந்து போன ஒரு மனிதன் திரும்ப குரல் குடுக்க முடியாது , இதுக்குள்ள என்ன இருக்குனு நமக்கு தெரியாது, இந்த மணலை நம்ம கட்டுபாட்டில இல்லாத நம்ம கைகள் தோண்டுனதை மறந்தேட்டியா??? இந்த இடத்தில ஏதோ சரியில்லை அது நம்ம பாதிக்குறதுக்குள்ள நம்மை இந்த இடத்தை தொந்தரவு செய்யாம இங்க இருந்து போறது தான் நல்லதுடா , நமக்காக வீட்டில எல்லோரும் காத்திருக்காங்க," என்று அவளிற்கு புரிய வைக்கவேண்டும் என்று மிகவும் பொறுமையாக நீண்ட தன் விளக்கத்தை கூறி முடித்தான்.
ESTÁS LEYENDO
திக்...திக்...திக்...
Terrorஎனக்கு இதுவரை பழக்கமே இல்லாத திகில் கதையை முயற்சித்து உள்ளேன். தவறுகள் இருந்தால் என்னை மன்னிக்கவும்