சிறுவன்

881 70 44
                                    


இருவரும் ஒரே குரலில் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்த, அதை கவனித்த தாத்தா ," என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும் ஏன் இவ்வளவு அதிர்ச்சி ஆகுறீங்க??" என்று வினவினார்.

வயதான தாத்தா விற்கு எந்த வித அதிர்ச்சியும் கொடுக்க வேண்டாம் என்று எண்ணிய இருவரும் மீண்டும் ஒரே குரலில்," ஒன்னுமில்லை தாத்தா," என்று கூறினர்.அவர்களின் வாய் தான் அப்படி கூறியதே ஒலிய அவர்களின் முகங்களில் பீதி படிந்திருந்தது.அதை கவனித்த அந்த முதியவர்," நீங்க இரண்டு பேரும் எங்கிட்ட எதையோ மறைக்கறீங்க ," அது என்னனு சொல்லுங்க," என்று கண்டிக்கும் தொணியில் கூறினார்.ஒரு நிமிட அமைதிக்கு பிறகு அரவிந்தனே கூறத்துவங்கினான்," தாத்தா  நாங்க வீட்டுக்க வந்துகிட்டு இருக்கும் போது வழியில வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு , வண்டிய சரி பண்ணிட்டு வீட்டுக்கு வந்து இறங்கும்போது இந்த சின்ன பையன் எங்க பின்னாடி உட்கார்ந்து இருந்திருக்கான். அவன் எப்படி உள்ளே ஏறுனானு எங்களுக்கு தெரியலை ," என்று முழு உண்மையும் கூறாமல் பாதியை மட்டும் கூறினான்.அந்த நிலையிலும் அரவிந்தனின் சாமர்தியத்தை எண்ணி மதுவின் மனம் பெருமை கொண்டது.

அரவிந்தன் கூறிய பிறகே அங்கு நின்றிருந்த சிறுவனை கவனித்தார் அந்த பெரியவர்.பார்பதற்கு 6  வயது சிறுவனை ஒத்திருந்த தோற்றம் மாநிறத்தில் குண்டு கண்ணங்களுடன் முகத்தில் தவழும் புன்னகையுடனும் பச்சை நிற கண்களுடனும் நின்றிருந்த அவனை முதல் பார்வையிலே அவருக்கு பிடித்துவிடவே அவர் அரவிந்தனை பார்த்து," இப்போதைக்கு இந்த பையன்.இங்கயே தங்கட்டும் அரவிந்தா நம்ப பிரச்சினை எல்லாம் தீர்ந்ததுக்கு அப்பறமா இவனை பத்தி விசாரிச்சு எங்க அனுப்பனுமோ அங்க அனுப்பி வச்சிடளாம்," என்று தன் சம்மதத்தை தெரிவித்தார்.

தாத்தாவின் வார்த்தைகளில் சிறிது ஆசுவாசமடைந்த அரவிந்தன் அந்த சிறுவனை நோக்கினான், இந்த வீட்டினுள் நுழையும் முன் இருளடைந்திருந்த அவனது முகம் இப்பொழுது  ஒளியுடன் காணப்பட்டது மேலும் அவன் கண்களில் மின்னிய பச்சை நிற பளபளப்பை பார்க்கும் பொழுது மனதில் கிலி தோண்றியது.
நடப்பதை தடுக்கும் சக்தி தனக்கு இல்லை என்பதை நன்கு தெரிந்து கொண்ட அரவிந்தன் தன் தாத்தா வை பார்த்து ," சரி தாத்தா , நான் போய் முதல்ல போலீஸ் ல ஒரு புகார் கொடுத்திட்டு வந்திடறேன். என்ன தான் நம்ம வீட்டில நடந்த சம்பவம் மர்மமா இருந்தாலும் முதல்ல ஒரு புகார் கொடுக்குறது நல்லதா படுது, நீங்க எதுக்கும் கவலை படாம இருங்க , நான் போய்டு உடனே வந்திடறேன்," என்று கூறினான்.

திக்...திக்...திக்...Opowieści tętniące życiem. Odkryj je teraz