வாழ்க்கை என்பது ..
சங்கடங்களும்
சமரசங்களும்
நந்தவனங்களும்
தோன்றி மறையும் காலம்
இறைவனது கோலத்தில்,வாழ்க்கையில்
எட்டாத இலட்சியங்களை
எட்டிப்பிடிக்க
போராடும் மனிதர்கள் சிலர்தேன் சுமப்பதற்காகவே..
பூக்கும் பூக்கள் சில,
இலையுதிர் காலத்தில்
பூக்க நினைக்கும்
மரம் போல்
சில பறவைகளின் ஆதங்கம்மொட்டு விரியும் முன்னே..
அதை பறித்து. ....
நசுக்கி ரசிக்கும்
மனிதர்கள் சிலர்கதிரவனுக்காய்
காத்து நிற்கும்
நந்தவனமலர்களை
மண்டியிட்டு மடியச்செய்திடும்
மனிதர்கள் சிலர்உணர்வை மழுங்கச்செய்து
தன்னையே தொலைத்து... ,
பரிதவித்துக்கொண்டிருக்கும்
மனிதர்கள் சிலர்கண் காணா தேடல்களில்
வலிகளாலும்..
துரோகங்களாலும்.....
தன்னை நியாயப்படுத்த தெரியாமல்
தன் நினைவிழந்த
மனிதர்கள் சிலர்தன்னை சுற்றிப்போட்ட வேலிக்குள்
தினம் தினம்..
தன்னை வெளியேற்றிக்கொள்ள
போராடும் மனிதர்கள் சிலர்மனிதா........!
மனிதம் எங்கு தொலைந்தது..?