தோழமை

151 1 0
                                    

தோல் சேர்ந்து
கை கோர்த்து
தோழமையுடன்....
நாம் கடந்து வந்த பாதை
மீண்டும் வழி விடுமா ...?
அதே புன்னகையுடன்

காலங்கள் கடந்து சென்ற போதும்
நம்முள்
அழியாச்சின்னமாய்........
எஞ்சியிருக்கும் ஞயாபங்களை
ஒரு வீணையாய்.....
மீட்டுகின்றேன்

கண்ட கனவுகளை
தொலைத்து விட்டு
எங்கேயோ. .. ..
திசைமாறிப்போகும் பாதையில்
நீ வருவாய் என,
உன் உயிர்த்தோழியாய்...
காத்துநிற்கிறேன்........

உன்னைவிட்டு,
நான் வெகுதூரம்....
கடந்து வந்த பொழுதும்
நம் சிந்தனைகள்
என்றும் மாறி
தோற்றுப்போனதில்லை
உன்னுடனான
என் நட்பு
கை கோர்த்து செல்லவே
ஏங்கி நிற்கும்

எந்த இன்னலையும்
இன்முகமாய்
உன்னுடன் சேர்ந்து
தீர்வு கண்டவள்
நீயின்றி
தனிமையில்
புதைந்து போகின்றேன்
அது புதைகுழி என தெரியாமல் ,

உன்னுடனான
என் நட்பு
என்றும் போற்ற வைத்ததே..!
தவிர
என்றும் தலைகுனிய வைத்ததில்லை. .

எப்பொழுதும்
உன் உயிர்த்தோழியாய்...,
என்னை அறிமுகம் செய்து
உன்னுடன்
வலம் வரவே விரும்புகின்றேன்






 எனக்கான தேடல் (கவிதைகள்)Where stories live. Discover now