நடைப்பயணம்

68 1 0
                                    

ஓர் இளம் காலை
என் சிந்தனையை மழுங்கச்செய்திடும்
மலர்களின் வாசம்
உடல் சிலிர்த்திடும்
இதமான தென்றல்
காணும் இடமெல்லாம்
உறைபனி
கீச்சிடும் பறவைகளின்
கானமழை
தானாகவே தோன்றிடும்
இதழ்களின் புன்னகையுடன்
ஒரு பாடலை
முணுமுணுத்திடும் உதடுகள்
இதமான காற்றில்
களைந்தாடும் கூந்தல்
புத்துயிர் பெற்ற மனதுடன்
ஏங்கி நிற்கும்
ஓர் நடைப்பயணம்
எனதாக வேண்டும்

ஓர் தனிமை விரும்பியாய்..
தன்னையே மறந்து
அந்த இயற்கையின் அழகில்
நானும் ஒரு ரசிகையாய்..,
அதனுள் தொலைந்து போக
ஒர் யாசகனாய். ...!












 எனக்கான தேடல் (கவிதைகள்)Where stories live. Discover now