தொட்டால் சிணுங்கி, மூடிக்கொள்ள ஒரு இலையும் இல்லாமல் முழுவதும் காய்ந்திருந்தது.
பல மாதங்களாக விழுந்த விதைகளும் ஏதும் முளைக்கவில்லை.வெற்று தொட்டியை பார்க்கும்போதெல்லாம், அதில் சீண்டி விளையாடிய தொட்டா சிணுங்கி இருந்த இடத்தில் அதன் இன்மை வளர்ந்திருந்தது, அவ்வின்மையின் வெறுமையான இலைகள் என்னைச் சீண்டி பழிதீர்க்க, மனம் தன்னுள் தானே சில கணம் மூடிக்கொண்டது.
ஒரு மாலையில், அந்தத் தொட்டியில், சில தொட்டால் சிணுங்கி விதைகள் முளைத்திருந்தன.
சுழற்சியின் அற்புதம் வெளிப்பட்டிருந்தது.
YOU ARE READING
தொட்டால் சிணுங்கி
Poetryதொட்டால் சிணுங்கி பற்றிய அவதானிப்புகள். Observations on "touch me not" plant.