ஒரு மௌன பயனம்

439 18 10
                                    

அழகான பச்சை கம்பலம் போர்த்திய நெற்கதிர்களை பதமாக வீசிய தென்றல் வருடிவிட்டு செல்ல , தென்றலின் மெல்லிய இசைக்கேற்போல அந்த கதிர்களும் மெதுவாக அசைந்தாட அவ்விடத்தில் ஒரு நாட்டிய கச்சேரி அரங்கேறியது.


காரின் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த அவன் கண்கள் அந்த அழகிய நாட்டியத்தை பார்தாலும் மனதில் எதுவும் பதியவில்லை, மனதில் பல குழப்பங்கள் சூழ்ந்திருக்க அவன் நிலை அவனுக்கே புரியாத புதிராக இருந்தது.அவனது சிந்தையை கலைத்தது டிரைவரின் குரல்,


"தம்பி அந்த கண்ணாடிய கொஞ்ச இடது பக்கம் திருப்பு"

அவனது செவியை அடைந்த அவரின்.கோரிக்கையை கைகள் நிறைவேற்ற மறுக்க அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

"தம்பி உன்னை தான் பா........"


மீண்டும் அவன் கவனத்தை பெற முயன்றவர் அவனை தன் கைகளால் லேசாக உலுக்கினார்.அவரை புரியாத பார்வை பார்த்த அவன் கேள்வியாக நோக்கினான்.அவர் மீண்டும் தான் கூறியதை செய்கையால் செய்து காட்ட அவன் கைகள் அந்த காரின் கண்ணாடியை சற்று இடது பக்கமாக திருப்பியது.அவர் ஒரு பார்வையை சாலையில் ஒட்டிவிட்டு

"போதும் தம்பி"

என்று அவன்புறம் ஒலியை மட்டும் அனுப்பினார்.

அவன் கண்கள் அவனது கையை ஆராயத்துவங்கியது கைகளில் ஆங்காங்கே சிறு வெட்டு காயங்கள் சின்ன சின்ன சிராப்புகள் என்று கூட சொல்லலாம். காரின் ஏசி அண்டார்டிக்காவின் காற்றுகளை அனுப்பி வெட்டுக்களின் காயங்களை குளிரூட்டியது. தன் கைகள் மெதுவாக மரத்துப்போனதை உணர்ந்த அவன் தன் விரல்களில் கவனத்தை முழுவதுமாக செலுத்தினான். மெவாக தன் ஆள்காட்டி விரலை மேலும் கீழுமாக ஆட்ட வேண்டும். விரல் அசையவே இல்லை. மீண்டும் ஒரு முறை முயன்று பார்ப்போம். கைகளை உதரிவிட்டு கவனத்தை விரலில் செலுத்தி முயன்று தோற்றுப்போனான். பக்கத்தில் இருந்த டிரைவர் அவனை பார்த்தார் பின் அவர் கதவு கைப்பிடியின் குழியில் விரலை நுளைத்தார். நான் மறுபக்கம் திரும்பியபோது என் கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி காணாமல் போனது.

பின் இருக்கையை திரும்பி பார்த்த அவனை அங்கு அமர்ந்திருந்த இரு வயதானவர்கள் நோக்கி சிரித்தார்கள்.அவர்களை நோக்கி சிரிக்க வேண்டும் என்ற உணர்வில்லாதவன் அமைதியாக வெளியே நோக்கினான். அந்த வாகனத்தின் தாலாட்டாலும் வழியெங்கும் வீசிய இதமான காற்றின் காரணமாகவும் அவன் கண்கள் மெல்ல மூடி அமைதி தேட முயன்று தோற்றவன் மனதிலோ ,"இவர்கள் யார்? இது என்ன இடம்? எங்கே போகிறோம்? இவர்கள் பேசும் மொழி எனக்கு எப்படி தெரிகிறது? இவர்களிடம் பேசலாமா வேண்டாமா?," இப்படி பல கேள்விகள் அவனை குடைய மேலும் யோசிக்கும் திறனை.இழந்தவன் கண்களை வேகமாக திறந்தான் , திறந்ததும் அவன் கண்ணில் பட்டது அந்த மின்னும் பொருள். அதற்கு என்ன பெயர் இடுவது?,. 'மின்னி' அது தான் சரி. ஒரு சக்கரத்தை என் பக்கத்தில் இருப்பவர் இடதும் வலதும் திருப்ப அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருந்தது அந்த 'மின்னி'. மெல்லிய விசும்பல் சத்தம் பின்புறம் இருந்து கேட்க அந்த வயதானவர் ,


"பானுமதி அழுகாதமா எல்லாம் சரி ஆகிடும் நம்ம ராஜாவுக்கு ஒன்னும் ஆகாது,நீ அழுகுறத பார்தா தம்பியும் கவலைபடும் ல , சொன்னா கேளுமா,"

என்று அந்த பெண்மணிக்கு ஆறுதல் கூறியவர் முன்புறம் அமர்ந்திருந்த டிரைவரை காட்டி கண்களால் எச்சரித்தார்.

அவரின் எச்சரிக்கையை புரிந்துகொண்ட அந்த பெண், தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி அமைதியாக கண்களை மூடி அமர்ந்திருந்தவனை கவலையுடன் பார்தார்.இப்பொழுது அவன் மின்னி என்று பெயரிட்டதை நோக்கினான் அவன். அந்த வயதானவர் அவனை ஏறிட்டு பார்த்து,


"என்ன பா தம்பி.......அந்த கீ செயின் வேனுமா? டிரைவர் ஓட்டிட்டு இருக்கார்ல......ஊருக்கு போனதும் எடுத்து தரேன்."


ஒரு வித்யாசமான விசை அவனை ஆட்கொள்ள தன் கைகளை இருக்கியவன் மூச்சு வாங்க கண்கள் கலங்கி படிந்த நீர்துளி தன் கைகளில் வடிந்த போதும் , ஆவேசத்துடன் தன் கைகளை நீட்டி'மின்னி'யை பிடிக்க முயன்றான் அனைவரும் கதறினார்கள்.


"தம்பி லாரி வருது பா..........டிரைவர் வண்டிய நிருத்து............"

சட்டென்று மாறுது வானிலைDonde viven las historias. Descúbrelo ahora