Scene - 2 : சரித்திரம் சொல்லும்...

99 14 5
                                    

வாசுதேவன் நாயர் : சிரான் நாம் இங்கிலாந்து போகணும் உடனே.

சிரான் : நீங்க கிளம்புங்க சார். நான் போய் நாம போக வேண்டியது தேவையானதை செய்கிறேன்.

சிரான் சென்று இவர்கள் செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்கிறார். சிரான் தன் ஆசைமகனிடம் சென்று, அப்பா பணிக்கு நீண்ட தூரம் செல்கிறேன் அம்மா வை பார்த்துக்கொள் என்று ஆசைப்பாட்டு கூறிவிட்டு, மனைவி இடம் ஆறுதல் சொல்லி அவசரப்பணியை புரியவைத்து கிளம்புகிறார்.

வாசுதேவன் நாயர், சிரான் ஏர்போர்ட் சென்று, கிளம்பிவிட்டனர்.

பின் இங்கிலாந்தில், வாசுதேவன் நாயர் இன் நண்பரின் உதவியால் அங்கு தங்குகின்றனர்.

தங்கி ஓய்வு எடுத்து விட்டு தன் நண்பனின் உதவியை நாடுகிறார்.
நாயர் தன் நண்பனிடம், நேற்று பேங்க் கொள்ளை செய்த நபரை எந்த சிறையில் வைத்துள்ளனர் என்று கேட்கிறார். அதற்கு அவர் நண்பர், இல்லையே இங்கு பேங்க் கொள்ளை ஏதும் நடக்கவில்லை என்கிறார்.

நாயர் க்கு கோவம் வந்தது. என்ன நண்பா விளையாடுகிறாயா,நன்றாக யோசித்துப்பார் நேற்று பரபரப்பான செய்து அதுதான்.
நாயரின் நண்பர் அதிர்ச்சியானார் ஒரு கணம். நாயர் நீ அதை பற்றி வெளியே எங்கும் கேட்காதே, பேசவும் செய்யாதே. வந்த பணியை மட்டும் செய்து திரும்பு.

நாயர் : நாங்கள் வந்ததே அவனை விசாரணை செய்யத்தான்...

வில்லியம்ஸ் நாயரின் நண்பர்.

வில்லியம்ஸ் : நாயர் அது நீ நினைப்பது போல் எளிதல்ல. நேற்று நடந்தது பேங்க் கொள்ளை ஏதும் இல்லை. அவனை ராஜா குடும்பம் விசாரிக்கவே, அவ்வாறு ஒரு நிழலை உருவாக்கி கைது செய்து விட்டனர். இங்கிலாந்தில் ராணி இன் விசயத்தில் யாரும் தலையிட மாட்டனர். நீ ஏதும் செய்து பெரும் ஆபத்தில் மாட்டிக்கொள்ளாதே...

நாயர் : வில்லியம்ஸ் நீ அந்த போலீஸ் ஸ்டேஷன் இருக்கும் இடத்தை மட்டும் கூறு நாங்க பார்த்துக்கொள்கிறோம்.

கீழடி  ( Completed )Where stories live. Discover now