Scene - 6 : அங்கோர் வாட்...

70 13 6
                                    

அதி வீர ராஜா பாண்டியன் மீண்டும் எழுந்து வருவது தெரிந்த ஆளுநர், தனது சிப்பாய் களை தயாராக இருக்க சொன்னார். ராஜாவின் பலத்திற்கி ஈடே இல்லை, அனைவரையும் மாய்த்து உள்ளே வந்தார்.

உள்ளே ஆளுநர் தன் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.
ராஜாவை சுற்றி 25 நபர்கள் கத்தியுடன் சூழ்ந்தனர்.
ஆளுநர் ராஜாவிடம், ராஜா நீ யாரென்று நான் அறிவேன். உன்னை பலமும் பார்த்தேன். எனக்கு வேண்டியது உன் உயிரல்ல, ராணி பாண்டேயா வின் ஆராய்ச்சியை நீ செய்த அந்த ஆராய்ச்சி கூடமும், உன் ஆராய்ச்சியும் தன் வேண்டும். அதை குடுத்து விடு. நான் உன்னை விட்டு விடுகிறேன் என்றான்.
ராஜா விற்கு இவன் கேட்ட விதமும் பிடிக்கவில்லை, இவன் நோக்கமும் தவறானது என்று புரிந்துகொண்டார்.

ராஜா சற்றே தளராமல் தன் வாளை உரையில் இருந்து எடுத்தார். கர்வ முழக்கம் என் தமிழ் வெல்லும் என்று சொல்லி அவர்களுடன் சண்டையிட தொடங்கினர்.

சண்டையில் ராஜாவின் திறமைக்கு நிகரில்லை இவர்கள். ஆளுநர் பின்னிருந்து ராஜாவின் ஒரு கையை வெட்டிவிட்டார். ஆளுநர் ராஜாவின் நேருக்கு நேர் நின்று இருந்தார். மற்ற அனைவரும் இறந்து விட்டனர். ஆளுநர் பயத்தில் இன்னும் பலரை கூச்சலிட்டு அழைத்தார். ஆனால் ராஜாவின் மனதில்...

சண்டையிட ஒரு கை இல்லை, ஆனாலும் நான் ஜெயிப்பேன். எனக்கு ஏதும் ஆனால் ரகசியம் இவர்கள் அறிவார்கள். இவர்களை வீழ்த்துவதை விட ரகசியம் அளிக்கப்பட வேண்டும் என்று முதல் முதலாக தம் நாட்டின் வருங்காலம் கருதி அங்கிருந்து பின்வாங்கி செல்கிறார்.
சிப்பாய்கள் பின்னே துரத்தி வருகின்றனர்.

ராஜா வேகமாக குதிரையில் செல்கிறார். ராஜா வேகமாக நம் வைகை ஆற்றின் மதக்கிற்கு சென்றார். அங்கு உடனடியாக மதகை முழுக்க திறக்க ஆணை இடுகிறார்.
வைகை முழுதாக திறக்கப்பட்டு நீர் மொத்தம் வெளியேறியது.
ராஜா தன் குதிரையில் மீண்டும் தன் ஆராய்ச்சி கூடம் நோக்கி செல்கிறார்.
ஆற்று நீரை விட வேகமாக தான் குதிரையில் செல்கிறார்.
ஆற்று படுகை ஓரமாக கீழடி கிராமத்தில் அமைத்திருந்த தன் கூடத்திற்கு சென்று, நீர் வேகமாக வரும் போது ஆராய்ச்சி கூடம் உள்ளே குதித்து விடுகிறார்.
ஆராய்ச்சி கூடத்தில் இருந்த தன் ரகசியம் குறிப்பை தன் உடலை பிளந்து உள்ளே வைத்தேன் உயிரை மாய்த்து கொள்கிறார்.
வெள்ளம் முழுவதும் மூடிச்சென்றது. வெள்ளத்தில் வந்த மண் ஆராய்ச்சி கூடத்தை மூடியது.

கீழடி  ( Completed )Where stories live. Discover now