உன் விழியசைவில் நான் - 1

836 32 20
                                    

"குள்ள கத்திரிக்கா .. எந்திரிச்சு அந்த பக்கம் போடி ..." என்று அவன் தங்கை தலையில் நறுக்கென்று கொட்டிவிட்டு அவளிடம் இருந்து பறித்தபாப்கார்ன்-உடன் தனக்கு மிகவும் பிடித்த ஸ்போர்ட்ஸ் சேனலை வைத்துக்கொண்டு கத்திக்கொண்டு இருந்தான் கிரிஷ் என்கிற கிருஷ்ணன்.

  "அண்ணா ப்ளீஸ் குடுன்னா.. நான் பத்து நிமிஷத்துல தந்துடுறேன்.. செம சீன் போயிட்டு இருக்கு அதுல.."

"போடி .. அதெல்லாம் தரமுடியாது.. நானே ஆர்வமா மேட்ச் பாத்துகிட்டு இருக்கேன் .. வந்துட்டா.. ஒரு நாள் சீரியல் பாக்கலைனா என்ன ,"


"நீ ஒரு நாள் மேட்ச் பாக்கலைனா என்ன " என்று நந்தினி ( கிருஷ்ணனின் தங்கை ) அவனது முடியை பிடித்து ஆட்ட,"ஏய் விடு டி.." என்று இருவரும் சண்டை போட, டிவி ரிமோட் கீழே விழுந்து உடைந்தது. அது உடைந்தவுடன் , " என்ன அங்க சத்தம் .. எத போட்டு உடைச்சீங்க ?" என்று ஒரு குரல் வீட்டின் சமையல் அறையில் இருந்து வெளிப்பட,   அண்னன் தங்கை இருவரும் அமைதியாகி புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கச் தொடங்கினார்கள்.சமையல் அறையில் இருந்து வெளியே வந்த அவர்களின் அம்மா லட்சமி , இருவரையும் பார்த்துவிட்டு , கீழேவிழுந்த ரிமோட்டையும் பார்த்துவிட்டு இருவரையும் முறைக்க தொடங்கினார்கள்.கிருஷ்ணன் : அவதான் மா உடைச்சா,. நான் பாட்டுக்கு படிச்சிட்டு இருக்கேன்.. என்று கூற மீண்டும் முறைக்க ஆரம்பித்தார். முறைக்குற முறைப்புல கண்ணு ரெண்டு வெளில வந்துடும் போலயே என்று மெதுவாக கூற , தோசைக்கரண்டி பறந்துவந்து அவனது முதுகில் தாளம் போட்டது." அம்மா விடுமா .. " என்ற அலறலுடன் வெளியே ஓட, அதைப்பார்த்து நந்தினி சிரித்துக்கொண்டு இருந்தாள்.. அவளுக்கும் முதுகு வீக்கம் வரும் அளவிற்கு தோசைக்கரண்டியால் தாளம் போட்டார் லட்சு என்கிற லட்சமி,.அவர் உள்ளே சென்றதும் , கிரிஷ் உள்ளெ வர , இதெல்லாம் சகஜம் .. இன்னிக்கு கொஞ்சம் கம்மி என்று இருவரும் அமைதியாக ஷின்-சான் பார்க்க தொடங்கினார்கள்.இது தான் ஹீரோவோட வாழ்க்கை.. எந்த விஷயத்தையும் லேசா எடுத்துக்குவாரு. சரியான விளையாட்டுப்பிள்ளை..

உன் விழியசைவில் நான்Where stories live. Discover now