2

945 34 13
                                    

ஞாயிற்றுக்கிழமை மாலை, தெளிந்த வானத்தில் மெல்ல நகர்ந்துகொண்டிருந்த கொஞ்சூண்டு மேகத்தின் சோம்பேறித்தனம் எனக்கும் தொற்றிக்கொண்டதைப் போல அமர்ந்திருந்தேன், கையில் இருந்த இதழைக் கண்களால் மட்டும் படித்துக்கொண்டு.

"நீரா வந்திருக்கா, உங்கக்கிட்ட பேசனுமாம், நேத்து சொன்னேனே..." மனைவியின் குரல். நீரஜா. அடிப்படையில் நீல நிறம் கொண்ட சுடிதார் அணிந்திருந்தாள் (துப்பட்டா இல்லை!)

"உக்காரு" என்றபின்தான் அமர்ந்தாள், "என் மேல ஏதாவது கோவமா?"

'இல்லை' என்றுதான் சொன்னாள். அவளுக்கு இங்கே வேலை வாங்கித்தர உதவி நாடி வந்திருக்கிறாள், அவளிடம் நான் வேறு பதிலை எதிர்ப்பார்க்கக் கூடாதுதான்.

எங்கள் முழு உரையாடலும் ஐந்து நிமிடமே நீடித்தது, மனைவி மூலம் ஏற்கனவே அவளின் படிப்பு, பிற தகுதிகள் திறமைகள் எனக்குத் தெரிந்திருந்தது. ரெஸ்யுமே-வை எனக்கு மின்னஞ்சல் செய்யச் சொன்னேன். "தெரிஞ்ச கம்பெனி எதிலையாவது" என்பது அவள் திரும்பத் திரும்பச் சொன்ன சொற்கள், 'உங்கள் நிறுவனம் வேண்டாம்' என்றே ஒலித்தன, அவளை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளும் உத்தேசம் எனக்கும் இல்லை, இரண்டாவது யூனிட் தொடங்கியிருக்கும் வேளையில் கவனச்சிதறல் தேவையா?

இரண்டுவாரம் ஓடியது. நீரஜா என்னோடு மீண்டும் சகஜமாக பழகத் தொடங்கியிருந்தாள். என்னைப் பேர் சொல்லியே அழைத்தாள், ஒருவித உரிமை தெரிந்தது அதில். சீண்டுகிறாளா? யதார்த்தமா?

அன்று இரவுணவின் போது என் மனைவி நீரஜாவைப் பற்றி நிறைய பேசினாள், அவள் படிப்பு, திறமை, அழகு... என்னை ஆழம் பார்க்கிறாளோ? காரணம் சீக்கிரமே தெரியவந்தது, அனுதாபம்! நீரஜாவிற்கு வயது முப்பதை நெருங்குகிறது, ஆனால், இன்னும் திருமணம் ஆகவில்லை, "பாவம், செவ்வா தோஷமாம்!"

'இன்னுமா இந்த மாதிரி விஷயம்லாம் இவ்ளோ பிரச்சனை கொடுக்குது?' என்று வியந்துகொண்டேன்.

அதன் பின் நீரஜாவைப் பார்த்தபொழுதெல்லாம் எனக்கு அவள்மீதான ஆதி கிளர்ச்சி மீண்டும் தலைகாட்டியது.

நீரஜா (சிறுகதை)Donde viven las historias. Descúbrelo ahora