நட்பா காதலா 6

228 13 6
                                    

ஞாயிறு பொழுது கலகலப்பாகவே முடிய அனைவரும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் அனு மட்டும் யோசனையுடனும் துக்கத்துடனும் இரவினை கழித்தாள். அப்பொழுது அருணிடம் இருந்து போன் வர தன் எண்ணங்களை மறைத்து சகஜமாக பேசினாள்.

ஆனால் அருண், அனு நான் சொல்றத தப்பா எடுத்துக்காத. சீக்கிரமே எல்லார்கிட்டயும் உண்மைய சொல்றது நல்லதுன்னு தோணுது. சரோவுக்கு ஓரளவு விஷயம் தெரிஞ்சு இருக்கு. உன் வாழ்க்கையில நடந்தத நீயே சொல்றது நல்லது. அவங்க எல்லாரும் நல்லவங்க. அவங்களா தெரிஞ்சுகிட்டா ரொம்ப வருத்தப்படுவாங்க.

எனக்கும் அதுதான் சரின்னு தோணுது. கூடிய சீக்கிரமே எல்லாத்தையும் நாம சொல்லிடலாம். அதுக்கு முன்னாடி நாம வரப்போற எக்ஸாம் நல்லபடியா எழுதணும். லீவுக்கு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய் அங்க வச்சு சொன்னா நல்லா இருக்கும்னு தோணுது.

ஓகே அனு. நீ தூங்கி ரெஸ்ட் எடு. காலையில் பார்க்கலாம் என்று போனை கட் பண்ணினான்.

மாலை கல்லூரி முடிந்து ஹாஸ்டலுக்கு சென்ற அனுவை சந்திக்க ஒருவர் வந்து இருப்பதாக கூற யாரென்று பார்க்க கீழே சென்றால் அணு. அங்கு ஒரு நடுத்தர வயது பெண்மணியை கண்டு குழம்பினாள்.

அந்தப் பெண்மணி, ஓஹோ நீதான் அனுவா? என்று கேள்வி கேட்க

ஆமா ஆண்ட்டி ஆனா நீங்க யாருன்னு தெரியலையே என்று அணு கூறினாள்.

சரோவின் உடைய அம்மா என்று கூறி சிறிது நேரம் பேசினார். அவர் பேசப் பேச இப்படியே மண்ணுக்குள் புதைந்து போய் விட மாட்டோமா என்று கண்ணீருடன் நின்று கொண்டிருந்தாள். அப்பெண்மணி சென்றதும் தன் அறைக்கு சென்று யாரிடமும் பேசாமல் தூங்கி விட்டாள். சுதா சாப்பிட எழுப்பியதற்கு தலைவலி என்று கூறி படுத்து விட்டாள்.

காலையில் தெளிவான ஒரு முடிவுடன் கல்லூரி கிளம்பினாள். வழக்கமாக தாங்கள் சந்திக்கும் இடத்தில் நிற்கும் தனது தோழர் கூட்டத்தை தவிர்த்து முன்னேறினாள். அதனை கண்டவர்கள்அனுவை கூப்பிட அவர்களிடம் சென்றவள் எதற்கு கூப்பிட்டீங்க ?

நட்பா காதலா Where stories live. Discover now