நட்பா காதலா

407 21 5
                                    

                        அத்தியாயம் 1

அது ஒரு புகழ்மிக்க பொறியியல் கல்லூரி. ஆங்காங்கே கூட்டமாக மாணவர்கள் இன்று புதிதாக  வரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக காத்துகொண்டிருந்தனர்.

          டேய் சரோ என்று கூப்பிட்ட திசை நோக்கி திரும்பிய நம் நாயகனின் தரிசனத்திற்கு காத்துக்கொண்டிருந்த ரசிகைகள் அவனின் முறைப்பை கண்டு சிதறி ஓடினர். 

          ஆறடி  உயரமும் கம்பீரமும் அவன் அணிந்துள்ள கருப்பு நிற சட்டையும் சந்தனநிற கார்கோ பேண்டும் அவன் அழகை சிறப்புடன் காட்டியது.

             டேய் நாம காலேஜீக்குள்ள ராக்கிங் பண்ணகூடாதுனு அந்த சொட்டைத்தலை பிரின்சிபால் சொல்லிட்டாராம் டா மீறி பண்றவங்களுக்கு பனிஷ்மென்ட்  ரொம்ப இருக்கும்னு பேசிக்கிறாங்க டா என்று அவனுடைய நண்பன் அஸ்வின் கூற டேய் நாம ஜாலிக்கு ஒரு லிமிட்டோட  பண்றவரைக்கும் ப்ரோப்லேம் இல்ல  மச்சி என்று கூறிக்கொண்டிருக்கும் போது ஆகாய நீல வண்ணத்தில் சுடிதார் அணிந்து அழகுபதுமையை போல் நட ந்துவரும் பெண்ணை பார்த்து அனைவரும் மெய்மறந்து நிற்க  நாம ஹீரோவோ ஓய் ப்ளூ சுடிதார் இங்க வா என்று அந்த பெண்ணை கூப்பிட்டான்.

             நிமிர்ந்த நடையுடனும் நேர்கொண்ட பார்வையுடனும் அவனை நோக்கி வந்த பெண்ணைக்கண்டு உண்மையில் பேச்சற்று போனான். 

               சொல்லுங்க எதுக்காக என்ன கூப்பிட்டிங்க என்று நேராக  கேட்டவளாள் அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்தவளை ரசனையுடன் நோக்கினான். 

                 ஒய் உன் பேர் என்ன என்று அஸ்வின் கேக்க பாலாவோ எந்த டிபார்ட்மென்ட் என்று கேக்க அருகில் நின்ற அனன்யா எந்த ஊரு என்று கேட்டாள்.  இத்தனை கேள்விகளும் ஒரே நேரத்தில் கேட்டதை பார்த்து மெலிதான புன்னகைய சிந்தி என்ன  சீனியர்ஸ் இப்படி கேட்டா எப்புடி உங்களுக்கு என்ன தெரியணும் என் டீடெயில்ஸ் தான சொல்றேன்

                 என் பேர் அமிர்தா.  ஊரு திருநெல்வேலி.  இங்க மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட் போதுமா

                 பொண்ணுங்க அதிகம் அந்த கோர்ஸ் எடுக்கமாட்டாங்கலே  என்று சரோ கேக்க ஒரு விரக்தி புன்னகையை சிந்தி ஏதோ கூற முன்வரும்போது ஹே அனு உன்ன பாக்க அம்மா வெயிட் பன்னிட்டிருக்காங்க  சீக்கிரம் போ என்று கூறி ஒரு பையன் அழைக்க அனைவருக்கும் ஒரு தலையசைவுடன்  கிளம்பினாள்.

                  சாரி ப்ரோ என் பேர் அருண் இவன் தீபன் அனுவோட பிரிஎண்ட்ஸ் அம்மா  வெயிட் பன்றாங்க பாய் சீனியர்ஸ் என்று விடைபெறவும் கல்லாரி தொடக்கமணி அடிக்கவும்  சரியாக இருக்க அவரவர் வகுப்பு நோக்கி சென்றனர்.


             அமிர்தாவிற்கு வகுப்பில் ரம்யா சுதா என்று இருவர் மட்டுமே அவளுடைய வகுப்பில் பெண்கள. மூவரும் சிறிது நேரத்திலேயே நெருங்கிவிட்டனர்.  அமிர்தா அருண் தீபன் மூவரும் பள்ளி தோழர்கள்.அவளுக்காக அவர்களும் அவர்களுக்காக அவலும் இங்கு படிக்க  வந்துள்ளனர்.

                 டேய் சரோ அந்த பொண்ணு நம்மள நல்லா ஏமாத்திட்டா அவ பேர் அமிர்தானு சொன்ன ஆனா அந்த பசங்க அனு னு சொல்ராங்க ஆமா டா அவள் அடுத்து பாக்கும்போது இருக்கு அவளுக்கு அவளை கண்டுபிடிக்கிறது ஒன்னும் கஷ்டம் இல்ல நாம டிபார்ட்மென்ட் ல பொண்ணுங்க பத்து பேர்கூட இல்லை சோ இருக்கு அவளுக்கு. 

                 சரோ கூறியது போல் அவளை மீண்டும் பார்ப்பானா அவளுக்கு எதுவும் ஆபத்து வருமா என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

     Hi friends. This is my first story. If there is any mistake pls share it with me. I am eagerly awaiting for ur response. Pls comment as you think. Pudichalum sollunga pidikkalanalum solunga I will correct myself.
         

நட்பா காதலா Donde viven las historias. Descúbrelo ahora