Any portion or sequence of this book, should not be reproduced or used in any manner without the permission of the author. All rights reserved.
அது ஒரு ரம்மியமான இரவு நேரம். சுற்றிலும் இருள் கவிந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீலக்கடல் விரிந்து கிடந்தது. இந்தியாவின் தென்கொடி முனைக்கு, தெற்கே இருக்கும் குமரித்தீவின் தென்முனையிலிருந்து, அரைவட்டமாக சுற்றிக்கொண்டு, தூத்துக்குடியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது அந்த பயணியர் கப்பல்.
இருக்கையின் பக்கவாட்டில் முழங்கையை ஊன்றியபடி எல்லையில்லா நீலக்கடலையும், வானத்தையும் ரசித்துக்கொண்டிருந்தான், கவின். அங்கே இருந்த இளஞ்சிட்டுகள் சிலர் கவினை ரசித்துக்கொண்டிருந்தார்கள். அவன் உணராமலில்லை. இரவு நேரத்தில் தனித்து, காரை ட்ரைவ் செய்ய முடியாது என்று தான் கப்பலில் பயணம் செய்ய முடிவெடுத்தான். சுற்றி இருப்பவர்களின் எடை போடும் பார்வையும், அவனைப்பற்றி அவர்கள் அறிந்து கொள்ள காட்டிய ஆர்வமும் 'ஹுப்' என்று பெருமூச்செறிய வைத்தது. அவன் ஷூ கால்கள் தளத்தை ஒருவித தாளத்துடன் தட்ட துவங்கியிருந்தது.
இந்நேரம் அவன் மனைவி 'மாயா' அவனோடே இருந்திருக்க வேண்டும். "ஹே!! கேர்ல்ஸ்!! இவர் 30 ப்ளஸ் அங்கிள்.. நீங்க பெட்டரா ட்ரை பண்ணுங்களேன்." கூலாக அவர்களிடம் கண்சிமிட்டி சொல்லிவிட்டு, அவன் கைகளுக்குள் தன் கைகோர்த்து உரிமையை நிலைநாட்டியிருப்பாள்.
மனைவியின் நினைவில் முகம் கனிந்து, இதழோரம் நெளிந்தது. சுற்றி இருந்தவர்களின் கேள்வி கணைகளை தவிர்க்கும் பொருட்டு, உதட்டோரம் மென்சிரிப்போடு 'எக்ஸ்க்யுமி' என்றவாறே தலைகோதியபடி எழுந்து நின்றவன், விடுவிடுவென அங்கிருந்து வெளியேறினான். கப்பலின் மேல்தளத்திற்கு சென்று, இரு கைகளையும் ஊன்றியபடி நின்றுகொண்டான். கடற்காற்று அவன் முன்னுச்சி முடிகளை கலைத்து விளையாடியது. இதே போலத்தான், அவள் விரல்களும் அடிக்கடி அவன் சுருள் முடியை கோதிவிடும்.
அவன் கைப்பிடிக்குள், அந்த இடைவெளியில் மாயாவே நிற்பது போன்ற பிரமை. அவள் மென்மையும், வாசமும் நினைவடுக்கில் எழுந்து பெருமூச்செறிய வைத்தது.
ВЫ ЧИТАЕТЕ
காதலெனுந் தீவினிலே! 2
Исторические романыsequel story of kathalenum theevinile - 1 சோழதேசத்து இளவரசன் ஆதன்அறனாளனையும், குமரித்தீவின் இளவரசி கன்யாதேவியையும் மையமாகக்கொண்ட, வரலாற்று புனைவு.