காவல் மரம்

97 9 0
                                    

ஆதன்அறனாளன், வேல் எறிவதில் சாமர்த்தியன். சிற்றரசாக சுருங்கி கிடந்த நாட்டின் எல்லைகளை விஸ்தீரணம் செய்வதில் தணியா வேட்கை கொண்டவன். குறுநில மன்னர்களுடன் சமர் செய்து தன் நாட்டின் எல்லையை தெற்குப்பகுதியில் விரிவு படுத்திவிட்டான். இனி அந்த நீலக்கடலுக்கு அப்பால் இருக்கும் தேசங்களையும் கைப்பற்றி அழிக்கமுடியாத வல்லரசாக உருப்பெற வேண்டும். அதற்கு முதலில் கவிர நாட்டை, காடாக்க வேண்டும்; வஞ்சினத்துடன் முடிவுக்கு வந்த ஆதன், தேர்ப்படைத் தலைவனை முன்னே வரும்படி அழைத்தான்.

"இளவரசே!!" வணங்கி பணிந்து நின்றார் சேனாதிபதி.

"ம்ம்.." அருகிலிருந்த ஆசனத்தில் அமருமாறு சைகை செய்தான், ஆதன்.

"கோட்டையை சுற்றி இருக்கும் கிராமங்களின் ஆறு, குளங்கள், கிணறுகளை அழித்து விடுங்கள். தேர்ப்படையை கொண்டு விளைநிலங்களை இரவோடு இரவாக தாக்கி அழித்து விடுங்கள். மக்களை விரட்டியடித்து விடுங்கள். கவிர நாடு காடாக மாற வேண்டும் சேனாதிபதி!!" வஞ்சினத்துடன் வார்த்தைகள் வந்து விழுந்தன.

"இளவரசே!! இடையிடுவதற்கு மன்னிக்க வேண்டும். விளைநிலங்களையும், பயிர்களையும் அழிப்பது போர் அறமாகாது.." இழுத்து கூறியவர், இளவரசரின் கட்டளையை மறுப்பு கூற நேர்ந்து விட்ட சங்கடத்தால், ஆசனத்தில் நெளிந்து கொண்டிருந்தார்.

வெறுப்பும், இகழ்ச்சியும் கலந்த புன்சிரிப்பை சிந்தின ஆதனின் வலிய இதழ்கள்.

"தன் பாதுகாப்பை மட்டும் மனதில் நிறுத்தி, மக்கள் துன்புற்றாலும் கவலை இல்லை என்று கோட்டைக்குள் ஒளிந்திருக்கும், ஒரு முட்டாள் கோழையின், அரசாட்சியில் குடிகள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள் சேனாதிபதி!! நம் படைகள் நிறைய சேதாரத்தை தாங்கியிருக்கிறது. பழி தீர்க்காமல் திரும்பினால் என் வீரர்களுக்கு அது அவமரியாதை."

"அதற்கில்லை அரசே...."

"ஹும்!! கட்டளையை நிறைவேற்றுங்கள்.. கவிர நாடு, காடாகட்டும்.."

காதலெனுந் தீவினிலே! 2Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ